IPLல் வரலாறு படைத்த பண்ட்ன் சாதனையை முறியடித்த இளம் சிங்கம் உர்வில் பட்டேல்

First Published | Nov 29, 2024, 9:51 AM IST

அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைிதருந்தார் இந்நிலையில் அவரது சாதனையை இளம் வீரர் உர்வில் படேல் முறியடித்துள்ளார்.

Urvil Patel

27 வயதான ரிஷப் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்நிலையில் தற்போது திடீரென அவரது பெரிய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அவரது சாதனையை இளம் பேட்ஸ்மேன் உர்வில் பட்டேல் முறியடித்துள்ளார். எனவே பண்ட்ன் எந்த சாதனையை ஊர்வில் படேல் முறியடித்தார் என்பதை தெரிந்து கொள்வோம்.

Urvil Patel

ரிஷப் பண்ட்ன் சாதனையை முறியடித்த உர்வில் படேல் 

26 வயதான உர்வில் படேல், சையத் முஷ்டாக் அலி டிராபி 2024ல் குஜராத் அணிக்காக விளையாடி, சையத் முஷ்டாக் அலி டிராபி வரலாற்றில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். உர்வில் படேல் 28 பந்துகளில் சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார். அவருக்கு முன், இந்த சாதனை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். பண்ட் 32 பந்துகளில் சதம் அடித்து இந்த சாதனையை படைத்தார்.

Tap to resize

Urvil Patel

திரிபுராவுக்கு எதிராக ஜொலித்த ஊர்வில்

குஜராத் அணிக்காக விளையாடி வரும் ஊர்வில் படேல், திரிபுராவுக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 28 பந்துகளில் 100 ரன்கள் குவித்து வரலாற்று சிறப்பு மிக்க பல சாதனைகளை படைத்துள்ளார். இந்தியாவுக்காக டி20யில் வேகமாக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸின் போது, ​​அவர் 35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்தார். ​​7 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் இந்த சாதனையில் உள்ளடங்கியது. அவரது இன்னிங்ஸ் காரணமாக, அவரது அணி 156 ரன்கள் இலக்கை 10.2 ஓவர்களில் துரத்தியது.

Rishabh Pant

அதிவேக சதம் அடித்த ரிஷப் பண்ட்

2018 ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய போது ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிராக அதிவேக சதம் அடித்த சாதனையை ரிஷப் பண்ட் செய்தார். அந்த நேரத்தில் அவர் 32 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். அவர் 38 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். இதன் போது, ​​அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களை அடித்தார். அவரும் இலக்கை சேஸ் செய்யும்போது பண்ட் இந்த சாதனையை செய்திருந்தார். அவரது இன்னிங்ஸால் டெல்லி அணி 145 ரன்கள் இலக்கை 11.4 ஓவர்களில் அடைந்தது.

Latest Videos

click me!