ஐபிஎல் 2025 ஏலம் – 10 அணியிலும் இடம் பெற்ற வீரர்களின் முழு பட்டியல்!

First Published | Nov 26, 2024, 12:22 PM IST

10 teams Auctioned Players List for IPL 2025 : சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் ஐபிஎல் 2025 ஏலம் நடந்து முடிந்த நிலையில் 10 அணி வீரர்களின் முழு பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

IPL 2025 Auction Complete List, IPL 2025 Auction Players List

10 teams Auctioned Players List for IPL 2025 : ஐபிஎல் 2025 ஏலம் ஆச்சரியங்களுடனும், அதிர்ச்சியளிக்கும் வகையிலும் நடந்து முடிந்துள்ளது. என்ன ஆச்சரியம் என்றால் இதுவரையில் இல்லாத வகையில் ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 13 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். கேகேஆர் அணிக்காக விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயர் மீண்டும் கேகேஆர் அணியிலேயே ஏலம் எடுக்கப்பட்டார். அதுவும் ரூ.23.75 கோடி.

IPL 2025 Auction Full Squad, IPL 2025 Auction Full Squad

கேகேஆர் அணிக்கு கேப்டனாக இருந்து டிராபி வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் ரூ.26.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் என்ற மாஸ் வீரர்கள் அணியில் ஏலம் எடுக்கப்படவில்லை. அதிரடிக்கு பெயர் போன வார்னர் கூட ஏலம் எடுக்கப்படாதது தான் இங்கு அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18ஆவது சீசனுக்கான ஐபிஎல் 2025 ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற்றது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு பலமான அணிகளை உருவாக்கிக் கொள்ள ஒவ்வொரு அணிக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

Latest Videos


IPL 2025 Auction

2025 ஆம் ஆண்டுக்கான 18ஆவது சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் 367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 577 வீரர்கள் பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த டேவிட் வார்னரை எந்த அணியும் ஏலம் எடுக்க விரும்பவில்லை.

ஐபிஎல் 2025 ஏலம்:

  1. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் – ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி)
  2. ஐபிஎல் 2025 எலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் – ஜோஸ் பட்லர் (ரூ.15.75 கோடி)
  3. ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் – ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி)
  4. ஐபிஎல் 2025 ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அன்கேப்டு வீரர் – ரஷீத் தர் (ரூ.6 கோடி)
  5. ஐபிஎல் 2025 ஏலத்தில் இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்த வைபவ் சூர்யவன்ஷி – ரூ.1.10 கோடி
IPL 2025 Mega Auction, IPL 2025 Auction Players List, IPL 2025 Auction Team Wise Players

ஐபிஎல் 2025 வீரர்கள் அதிகபட்சம்:

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இடம் பெற வேண்டும். அதோடு கண்டிப்பாக 8 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற வேண்டும். ஐபிஎல் ஏலத்திற்கு ஒவ்வொரு அணிக்கும் ரூ.120 கோடி வரையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

10 அணிகளிலும் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் பற்றி பார்க்கலாம்:

Chennai Super Kings Full Squad in IPL 2025

சென்னை சூப்பர் கிங்ஸ்:

மொத்த வீரர்கள் – 25 (7 வெளிநாட்டு வீரர்கள்)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 14

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 6

மீதமுள்ள பர்ஸ் தொகை – ரூ.5 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – இல்லை

ஏலம் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்:

  1. நூர் அகமது – ரூ.10 கோடி
  2. ரவிச்சந்திரன் அஸ்வின் – ரூ.9.75 கோடி
  3. டெவோன் கான்வே – ரூ.6.25 கோடி
  4. சையது கலீல் அகமது – ரூ.4.80 கோடி
  5. ரச்சின் ரவீந்திரா – ரூ.4 கோடி
  6. அன்ஷுல் கம்போஜ் – ரூ.3.40 கோடி
  7. ராகுல் திரிபாதி- ரூ.3.40 கோடி
  8. சாம் கரண் – ரூ.2.40 கோடி
  9. குர்ஜாப்னீத் சிங் – ரூ.2.20 கோடி
  10. நாதன் எல்லீஸ் – ரூ.2 கோடி
  11. தீபக் கூடா – ரூ.1.70 கோடி
  12. ஜெமி ஓவர்டன் – ரூ.1.50 கோடி
  13. விஜய் சங்கர் – ரூ.1.20 கோடி
  14. வன்ஷ் பேடி – ரூ.55 லட்சம்
  15. ஆண்ட்ரே சித்தார்த் – ரூ.30 லட்சம்
  16. ஷ்ரேயாஸ் கோபால் – ரூ.30 லட்சம்
  17. ராமகிருஷ்ணா கோஷ் – ரூ.30 லட்சம்
  18. கமலேஷ் நாகர்கோட்டி – ரூ.30 லட்சம்
  19. முகேஷ் சவுத்ரி – ரூ.30 லட்சம்
  20. ஷேக் ரஷீத் – ரூ.30 லட்சம்

தக்க வைக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்:

  1. ருதுராஜ் கெய்க்வாட் – ரூ.18 கோடி
  2. ரவீந்திர ஜடேஜா - ரூ. 18 கோடி
  3. மதீஷா பதிரனா – ரூ.13 கோடி
  4. ஷிவம் துபே – ரூ.12 கோடி
  5. எம்.எஸ்.தோனி – ரூ.4 கோடி
Delhi Capitals Full Squad in IPL 2025

டெல்லி கேபிடல்ஸ்:

மொத்த வீரர்கள் – 23 (வெளிநாட்டு வீரர்கள் 7)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 13

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 6

மீதமுள்ள பர்ஸ் தொகை – 20 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – இல்லை

டெல்லியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

  1. அக்‌ஷர் படேல் ரூ.16.5 கோடி
  2. குல்தீப் யாதவ் ரூ.13.25 கோடி
  3. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.10 கோடி
  4. அபிஷேக் போரெல் ரூ.4 கோடி

டெல்லி கேபிடல்ஸ் ஏலம் எடுத்த வீரர்கள்:

  1. கேஎல் ராகுல் – ரூ.14 கோடி
  2. மிட்செல் ஸ்டார்க் – ரூ.11.75 கோடி
  3. டி நடராஜன் – ரூ. 10.75 கோடி
  4. ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் – ரூ.9 கோடி
  5. முகேஷ் குமார் – ரூ.8 கோடி
  6. ஹாரி ஃப்ரூக் – ரூ.6.25 கோடி
  7. அஷுதோஷ் சர்மா – ரூ.3.80 கோடி
  8. மோகித் சர்மா – ரூ.2.20 கோடி
  9. ஃபாப் டூ ப்ளெசிஸ் – ரூ.2 கோடி
  10. சமீர் ரிஸ்வி – ரூ.95 லட்சம்
  11. டோனோவன் ஃபெரேரா – ரூ.75 லட்சம்
  12. துஷ்மந்தா சமீரா – ரூ.75 லட்சம்
  13. விப்ராஜ் நிகம் – ரூ.50 லட்சம்
  14. கருண் நாயர் – ரூ.50 லட்சம்
  15. மாதவ் திவாரி – ரூ.40 லட்சம்
  16. திரிபுராணா விஜய் – ரூ.30 லட்சம்
  17. மன்வந்த் குமார் – ரூ.30 லட்சம்
  18. அஜய் மண்டல் – ரூ.30 லட்சம்
  19. தர்ஷன் நல்கண்டே – ரூ.30 லட்சம்
Gujarat Titans Full Squad in IPL 2025 Auction

குஜராத் டைட்டன்ஸ்:

மொத்த வீரர்கள் – 25 (வெளிநாட்டு வீரர்கள் 7)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 14

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 6

மீதமுள்ள பர்ஸ் தொகை – 15 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – இல்லை

தக்க வைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்:

  1. ரஷீத் கான் – ரூ.18 கோடி
  2. சுப்மன் கில் ரூ.16.5 கோடி
  3. ஷாருக் கான் – ரூ.8.5 கோடி
  4. சாய் சுதர்சன் – ரூ.4 கோடி
  5. ராகுல் திவேதியா – ரூ.4 கோடி

ஏலம் எடுக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்:

  1. ஜோஸ் பட்லர் – ரூ.15.75 கோடி
  2. முகமது சிராஜ் – ரூ.12.25 கோடி
  3. கஜிசோ ரபாடா – ரூ.10.75 கோடி
  4. பிரஷித் கிருஷ்ணா – ரூ.9.50 கோடி
  5. வாஷிங்டன் சுந்தர் – ரூ.3.20 கோடி
  6. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் – ரூ.2.60 கோடி
  7. ஜெரால்டு கோட்ஸி – ரூ.2.40 கோடி
  8. கிளென் பிலிப்ஸ் – ரூ.2 கோடி
  9. சாய் கிஷோர் – ரூ.2 கோடி
  10. மகிபால் லோம்ரோர் – ரூ.1.70 கோடி
  11. குர்னூர் சிங் பிரார் – ரூ.1.30 கோடி
  12. முகமது அர்ஷத் கான் – ரூ.1.30 கோடி
  13. கரீம் ஜனத் – ரூ.75 லட்சம்
  14. ஜெயந்த் யாதவ் – ரூ. 75 லட்சம்
  15. இஷாந்த் சர்மா – ரூ.75 லட்சம்
  16. குமார் குஷாக்ரா – ரூ.65 லட்சம்
  17. குல்வந்த் கெஜ்ரோலியா – ரூ.30 லட்சம்
  18. மனவ் சுதர் – ரூ.30 லட்சம்
  19. அனுஜ் ராவத் – ரூ.30 லட்சம்
  20. நிஷாந்த் சிந்து – ரூ.30 லட்சம்
Kolkata Knight Riders Full Squad in IPL 2025 Auction

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

மொத்த வீரர்கள் – 21 (வெளிநாட்டு வீரர்கள் 8)

ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் – 9

ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் – 6

மீதமுள்ள பர்ஸ் தொகை – 50 லட்சம்

ஆர்டிஎம் கார்டு – இல்லை

கேகேஆர் தக்க வைத்த வீரர்கள்:

  1. ரிங்கு சிங் – ரூ.13 கோடி
  2. வருண் சக்கரவர்த்தி – ரூ.13 கோடி
  3. சுனில் நரைன் – ரூ.12 கோடி
  4. ஆண்ட்ரே ரஸல் – ரூ.12 கோடி
  5. ஹர்ஷித் ராணா – ரூ.4 கோடி
  6. ரமன்தீப் சிங் – ரூ.4 கோடி

ஏலம் எடுக்கப்பட்ட கேகேஆர் வீரர்கள்:

  1. வெங்கடேஷ் ஐயர் – ரூ.23.75 கோடி
  2. ஆண்ட்ரிச் நோக்கியா – ரூ.6.50 கோடி
  3. குயீண்ட டி காக் – ரூ.3.60 கோடி
  4. அங்கிரிஷ் ரகுவன்ஷி – ரூ.3 கோடி
  5. ஸ்பென்சர் ஜான்சன் – ரூ.2.80 கோடி
  6. மொயீன் அலி – ரூ.2 கோடி
  7. ரஹ்மானுல்லா குர்பாஸ் – ரூ.2 கோடி
  8. வைபவ் அரோரா – ரூ.1.80 கோடி
  9. அஜிங்க்யா ரஹானே – ரூ.1.80 கோடி
  10. ரோவ்மன் பவல் – ரூ.1.50 கோடி
  11. உம்ரான் மாலிக் – ரூ.75 லட்சம்
  12. மணீஷ் பாண்டே – ரூ.75 லட்சம்
  13. அன்குல் ராய் – ரூ.40 லட்சம்
  14. லுவ்னீத் சிசோடியா – ரூ.30 லட்சம்
  15. மாயங்க் மார்க்கண்டே – ரூ.30 லட்சம்     
click me!