
Delhi Capitals New Captain in IPL 2025 : ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இன்னும் கோப்பையை வெல்லாத அணிகளில் டெல்லி கேப்பிடல்ஸ்-ம் ஒன்று. அடுத்த ஐபிஎல்-ல் கோப்பையை வெல்லும் அளவுக்கு வலுவான அணியை அமைக்க அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் மற்றும் அக்சர் படேல் இருவரும் இணைந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்துவார்கள் என்று அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் அறிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், ‘எங்களுக்கு டாப் ஆர்டரில் நிலையான ஒரு பேட்ஸ்மேன் தேவை. அனுபவம் வாய்ந்த, இன்னிங்ஸை கட்டமைக்கும் ஒருவர்.
கே.எல். ராகுல் தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனிலும் 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். கோட்லா மைதானம் அவருடைய ஆட்டத்திற்கு ஏற்றது. அவரை அணியில் சேர்த்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் அணியில் பெரும்பாலான வீரர்கள் இளம் வீரர்கள். கே.எல். ராகுல் மற்றும் அக்சர் படேல் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள். கே.எல். ராகுலின் பேட்டிங் மற்றும் அனுபவம் எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
கே எல் ராகுலுக்கு ரூ.14 கோடி
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் முதல் நாளில் ரூ.14 கோடிக்கு ராகுலை டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ராகுலை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் போட்டியிட்டன. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் அனைத்து அணிகளையும் விஞ்சி ராகுலை வாங்கியது. ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 9 வீரர்களை டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
ராகுல் தவிர, மிட்செல் ஸ்டார்க், ஹாரி ப்ரூக், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் ஆகியோர் குறிப்பிடத்தக்க வீரர்கள். ரைட் டு மேட்ச் கார்டை பயன்படுத்தி ரூ.9 கோடிக்கு ஃப்ரேசர்-மெக்கர்க்கை டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அனைத்து வீரர்களையும் விட ராகுல் மற்றும் அக்சருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக டெல்லி கேப்பிடல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்காக டெல்லி கேபிடல்ஸ்
அடுத்த ஐபிஎல்-ல் கோப்பையை வெல்லும் நோக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணி வலுவான அணியை அமைத்து வருகிறது. இதனால் சீனியர் வீரர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜூனியர் வீரர்களை சிறப்பாக வழிநடத்தும் பொறுப்பு ராகுல் மற்றும் அக்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராகுல், அக்சர் தலைமையில் டெல்லி: உரிமையாளர் ஜிண்டால் அறிவிப்பு
அடுத்த ஐபிஎல்-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பல மாற்றங்கள் இருக்கும். பயிற்சியாளர்கள் மாறியது போல, வீரர்களும் மாறுகிறார்கள். கேஎல் ராகுல் மற்றும் அக்ஷர் படேல் தலைமையில் தான் டெல்லி கேபிடல்ஸ் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 14 முதல் மே 25ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் கேஎல் ராகுல் கேப்டனாகவும், அக்ஷ்ர் படேல் துணை கேப்டனாகவும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணியில் எத்தனை வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டார்கள்?
டெல்லி கேபிடல்ஸ் அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 19 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் மட்டும் தான் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 23 வீரர்கள் இருக்கின்றனர். ஏலத்தில் செலவு செய்யப்பட்ட தொகை போக மீதம் இருப்பது ரூ.20 லட்சம் மட்டும்.
டெல்லியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
டெல்லி கேபிடல்ஸ் ஏலம் எடுத்த வீரர்கள்: