1938 ஆம் ஆண்டு இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. லியோனார்ட் ஹட்டன் ஓபனிங்கிற்கு வந்தார். இந்த இங்கிலாந்து வீரர் பவுண்டரிகள் அடிக்காமலேயே அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அதன்பிறகு ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் சதத்தையும் பூர்த்தி செய்தார். லியோனார்ட் இத்துடன் நிற்கவில்லை, சதத்திற்கு பிறகும் பந்து வீச்சாளர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதை தொடர்ந்தார். விக்கெட்டுகள் விழாமல் கூடுதலாக நின்று பந்துவீச்சாளர்களுக்கு சோதனையாக இருந்தார்.