Virat Kohli:விராட் கோலியின் நடுவிரல் சர்ச்சை:தடை விதிக்க கூடாது என்று நடுவரிடம் கெஞ்சி கூத்தாடியது ஏன்?

First Published | Sep 6, 2024, 4:14 PM IST

Virat Kohli Controversy, India vs Australia Test Match: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, போட்டி நடுவரிடம் தனக்கு தடை விதிக்கக் கூடாது என்று கெஞ்சிக் கேட்ட சம்பவம் ஒன்று உண்டு. ஆஸ்திரேலிய ரசிகர்களுடனான மோதலில் நடந்த அந்த சம்பவம் என்ன, அதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

Virat Kohli Controversy

இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் என்று சொல்லப்படும் விராட் கோலி போட்டி நடுவரிடம் கெஞ்சி கூத்தாடிய ஒரு சம்பவம் நடைபெற்றது. ஆம், தனக்கு தடை விதிக்க கூடாது என்று கள நடுவரிடம் கெஞ்சியிருக்கிறார். அது என்ன? ஏன் அவ்வாறு விராட் கோலி செய்தார்? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க…

விராட் கோலி களத்தில் 2 விதமாக செயல்படக் கூடியவர். ஒன்று ஜாலியான மோட். இன்னொன்று ஆக்ரோஷம். ஜாலியான மோடில் டான்ஸ் ஆடுவது, சக வீரர்களிடம் பேசி அரட்டை அடிப்பது, எதிரணி வீரர்களிடம் பேசுவது என்று கலகலன்னு இருப்பார். இதுவே போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்றால் ஆக்ரோஷமாக இருப்பார். அது எதிரணி வீரர்களாக இருந்தாலும் சரி, ரசிகர்களாக இருந்தாலும் சரி, கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்றுவிடுவார்.

Virat Kohli

சர்வதேச கிரிக்கெட்டில் வந்த போது தனது திறமையை தவிர, களத்தில் அவரது செயல்பாட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தைரியம், துணிச்சல், ஆக்ரோஷத்திற்கு பெயர் பெற்றவர். சண்டை என்று வந்துவிட்டால் வரிந்து கட்டிக் கொண்டு முதலாவதாக நிற்பார். இது போன்று ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களிடம் நிறைய நடந்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் கூட கவுதம் காம்பீர் உடன் வாக்குவாதமும் ஏற்பட்டிருக்கிறது.

வீரர்களுடன் ஆக்ரோஷமாக இருந்தாலும் ரசிகர்களுடனான மோதம் விராட் கோலியை தலைப்புச் செய்தியாக கொண்டு வந்திருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

Tap to resize

Virat Kohli vs Australia

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான சிட்னி டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களின் தவறான செய்கையால் கோபமடைந்த விராட் கோலி, அவர்களை நோக்கி தனது நடுவிரலை காண்பித்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா ஊடகங்களில் கூட தலைப்புச் செய்தியாக வெளியானது.

இந்த சம்பவத்தை ஃபிங்கர்கேட்' எ லா 'மன்கிகேட் ஊழல் என்று அழைத்தனர். 2008 ஆம் ஆண்டு, அதே இடத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை குரங்கு என்று குறிப்பிட்டதாக ஹர்பஜன் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு விராட் கோலிக்கு பயத்தையும் உண்டாக்கியது.

Virat Kohli vs Sydney Test Match

கோலி நடுவிரலை காண்பித்து சைகை செய்ததற்கான காரணம் குறித்து போட்டிக்கு பிறகு கள நடுவர் ரஞ்சன் மதுகல்லே கேட்டார். அப்போது தன்னை தடை செய்ய வேண்டாம் என்று கோலி கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஒரு நேர்காணலில் கோலி, சர்ச்சையை திறந்து தன்னை தடை செய்ய வேண்டாம் என்று மதுகலேவிடம் கெஞ்சியது எப்படி என்பதை நினைவு கூர்ந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: சிட்லியில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா ரசிகர்கள் அதிகளவில் கூடியிருந்தார்கள்.

Virat Kohli

நான் அவர்களைப் பார்த்து ஒரு விரலை காட்டினேன். ‘நான் மிகவும் கூலாக இருக்கிறேன். மேட்ச் ரெஃப்ரி மறுநாள் என்னை அவரது அறைக்கு அழைத்தார், நான், ‘என்ன ஆச்சு?’ என்பது போல கேட்டேன். அதற்கு அவர், ‘நேற்று என்ன நடந்தது?’ என்று கேட்டார். நான் சொன்னேன், ‘ஒன்றுமில்லை என்றேன்.

அதன் பிறகு நியூஸ்பேப்பை தூக்கி என் கண் முன்னே எறிந்தார். அதில், தலைப்புச் செய்தில் முதல் பக்கத்தில் நான் படபடக்கும் ஒரு பெரிய படம் இருந்தது. அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். என்னை தடை செய்யாதீர்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.

Virat Kohli

இதையடுத்து தான் செய்தது தவறு என்று தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவருக்கு தடை விதிப்பதற்கு பதிலாக அவரது போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீத கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், "நான் அதிலிருந்து தப்பித்துவிட்டேன். அவர் ஒரு நல்ல பையன், நான் இளமையாக இருந்தேன் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

இளமை பருவத்தில் கிரிக்கெட்டில் நான் செய்த பல விஷயங்களை நினைத்து பார்த்த போது உண்மையிலேயே சிரிக்கிறேன். ஆனால், நான் என்னுடைய வழியை ஒரு போதும் மாற்றவில்லை என்பதில் பெருமைப்படுகிறேன். எப்போதும் நான் நானாகவே இருக்கப் போகிறேன். யாருக்காகவும் நான் என்னை மாற்றிக் கொள்ளவே இல்லை என்று பெருமையாக கூறியிருக்கிறார்.

Latest Videos

click me!