துலீப் டிராபியில் சதம் விளாசிய அண்ணன் முஷீர் கான் – துள்ளி குதித்து கொண்டாடி தீர்த்த தம்பி சர்ஃபராஸ் கான்!

First Published Sep 6, 2024, 12:31 PM IST

துலீப் டிராபி - முஷீர் கான்: சிறப்பான பேட்டிங்கால் சர்பராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் தனது மூன்றாவது முதல் தர சதத்தைப் பதிவு செய்தார். இந்தியா- பி மற்றும் இந்தியா-ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில் முஷீர் கான் துலீப் டிராபியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து, இரட்டை சதத்தை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

Musheer Khan, Sarfaraz Khan, duleep trophy 2024

துலீப் டிராபி - முஷீர் கான்: மதிப்புமிக்க உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான துலீப் டிராபி வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 4 அணிகள் பங்கேற்கின்றன. பிசிசிஐ, இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி, இந்தியா டி என 4 அணிகளாக வீரர்களை பிரித்து துலீப் டிராபியை நடத்துகிறது. 

வியாழக்கிழமை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியா-பி மற்றும் இந்தியா-ஏ அணிகள் மோதின. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் முஷீர் கான். முஷீர் கான் துலீப் டிராபியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். மொத்தமாக அவருக்கு முதல் தர கிரிக்கெட்டில் இது மூன்றாவது சதம். 

தற்போது 2ஆவது நாளான இன்று இரட்டை சதம் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தற்போது வரையில் முஷீர் கான் 365 பந்துகளில் 16 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 174 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார்.

Duleep Trophy 2024-25, Duleep Trophy 2024

துலீப் டிராபியில் விளையாடும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் முஷீர் கான் சதம் அடித்து அசத்தினார். வரும் ஐந்து மாதங்களில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. குறிப்பாக, இன்னும் இரண்டு மாதங்களில் சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு துலீப் டிராபி மிகவும் முக்கியமானது.

ஏனெனில் துலீப் டிராபியில் சிறப்பாக செயல்படும் வீரர்களை இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளனர். சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கான் இந்தியா பி அணியில் விளையாடும் லெவனில் இடம் பெற்றுள்ளார். 

Latest Videos


Duleep Trophy 2024

சர்பராஸ் கான் ஏற்கனவே இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுக போட்டியிலேயே அசத்தலாக ஆடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.  

இருப்பினும், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் இடம் பிடிக்க சர்பராஸ் கானுக்கு துலீப் டிராபி மிகவும் முக்கியமானது. இதனால் முதல் போட்டியில் அவர் எப்படி ஆடப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சர்பராஸ் கானை அவேஷ் கான் சூப்பர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ செய்தார். 35 பந்துகளை சந்தித்து வெறும் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

Musheer Khan Batting

அதேபோல், அதிரடி வீரர் ரிஷப் பண்ட் 10 பந்துகளை சந்தித்து வெறும் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். ஆனால், சர்பராஸ் கானின் தம்பி, 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் முஷீர் கான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் அற்புதமாக ஆடி ரன்கள் குவித்தார். 

டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வேண்டுமானால் தங்கள் முழு பலத்தையும், திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார் முஷீர் கான். 227 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து விக்கெட்டுகள் விழும் நேரத்தில் சதம் அடித்து அணியை மேலும் சரிவில் இருந்து காப்பாற்றினார். தனது இன்னிங்சில் 10 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். 

Musheer Khan

முஷீர் கான் சதம் அடித்ததும் இந்தியா பி வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். ஆனால், சர்ஃபராஸ் கான் மட்டும் முஷீர் கானின் சதத்தை கொண்டாட ஒரு படி மேலே சென்றார். மிகுந்த மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து கொண்டாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

அவர் சதம் அடித்தபோது இந்தியா பி அணி 79 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. கலீல் அகமது, ஆகாஷ்தீப், அவேஷ் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். குல்தீப் யாதவ் 14 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 50 ரன்கள் கொடுத்தார். 

Musheer Khan

2ஆம் நாளில் முஷீர் கான் 174 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இன்னும், 26 ரன்கள் எடுத்தால் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார். மேலும், இந்திய அணியிலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் துலீப் டிராபியில் இந்த போட்டியில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

click me!