ஐபிஎல்லில் மின்னல் வேகத்தில் அரைசதம் அடித்த டாப் 10 வீரர்கள்

First Published Mar 13, 2020, 12:23 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குவதாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் விளைவாக ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஐபிஎல் நடக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஐபிஎல்லில் தங்களது ஆஸ்தான வீரர்களின் அதிரடியான பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஐபிஎல் நடத்துவது குறித்து விவாதிக்க நாளை(சனிக்கிழமை - 14ம் தேதி) ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் கூடுகிறது. 

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐபிஎல்லில் அதிவேகமாக அரைசதம் அடித்த டாப் 10 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
 

1. கேஎல் ராகுல் - 2018ல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 14 பந்தில் கேஎல் ராகுல் அடித்த சதம் தான், ஐபிஎல்லின் அதிவேக அரைசதம்.
undefined
2. யூசுஃப் பதான் - 2014ல் கேகேஆர் அணியில் ஆடிய யூசுஃப் பதான், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 15 பந்தில் அரைசதம் அடித்தார். இதுதான் ஐபிஎல்லின் இரண்டாவது அதிவேக அரைசதம்.
undefined
3. சுனில் நரைன் - கேகேஆர் வீரரான இவர், 2017ல் ஆர்சிபி அணிக்கு எதிராக 15 பந்தில் அடித்த அரைசதம் தான் மூன்றாவது வேகமான அரைசதம்.
undefined
4. சுரேஷ் ரெய்னா - 2014ல் பஞ்சாப் அணிக்கு எதிராக ரெய்னா, 16 பந்தில் அடித்த அரைசதம் தான் ஐபிஎல்லின் நான்காவது வேகமான அரைசதம்.
undefined
5. கிறிஸ் கெய்ல் - 2013ல் ஆர்சிபி அணியில் ஆடியபோது, புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 17 பந்தில் அரைசதம் அடித்தார்.
undefined
6. ஹர்திக் பாண்டியா - கடந்த சீசனில்(2019) கேகேஆர் அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா 17 பந்தில் அரைசதம் அடித்தார்.
undefined
7. ஆடம் கில்கிறிஸ்ட் - 17 பந்தில் அரைசதம்(2009)
undefined
8. கிறிஸ் மோரிஸ் - 17 பந்தில் அரைசதம்(2016)
undefined
9. இஷான் கிஷான் - 17 பந்தில் அரைசதம்(2018)
undefined
10. பொல்லார்டு - 17 பந்தில் அரைசதம்(2016)
undefined
click me!