Ind Vs Nz
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி 2 - 0 என்ற கணக்கில் வென்று அசத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகின்ற 6ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் முடிவடைந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
Ind Vs Nz
நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது முதல் போட்டி வருகின்ற 16ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும், இரண்டாவது போட்டி வருகின்ற 24ம் தேதி புனேவிலும், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ம் தேதி மும்பை வான்கடே மைதானத்திலும் நடைபெற உள்ளது.
Ind Vs Nz
முன்னதாக டிம் சவுதி தலைமையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவியது. இந்நிலையில் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டிம் சவுதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நியூசிலாந்து அணியை வழிநடத்தியதை எனது வாழ்நாள் கௌரவமாக நினைக்கிறேன். அணியின் நலன் கருதி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.
Ind Vs Nz
தொடர்ந்து அணிக்காக பந்துவீச்சில் எனது முழு திறனையும் வெளிப்படுத்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிபெறச் செய்வதே எனது குறிக்கோள். எந்தவொரு சூழலிலும் எனது அணியையே நான் பிரதானமாகக் கருதினேன். தற்போது இந்த பொறுப்பை டாம் லாதமிடம் ஒப்படைக்கிறேன். அவரும் அணியை சிறப்பாக வழிநடத்தி அணியை வெற்றிபெறச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Ind Vs Nz
இந்திய அணிக்கு எதிரான நியூசிலாந்து அணியை வழிநடத்தும் டாம் லாதம் கேப்டன் பதவிக்கு புதுமுகம் கிடையாது. ஏற்கனவே 2020 முதல் 2022 இடையேயான காலத்தில் இவர் தலைமையில் நியூசிலாந்து அணி விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.