ஆனால், ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் தக்க வைக்கப்பட வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், அவரை கேப்டனாக தங்களது அணியில் விளையாட வைக்க பஞ்சாப், ஆர்சிபி, லக்னோ அணிகள் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியிருக்கும் போது மும்பை இந்தியன்ஸ் அவரை விடுவித்தால் எப்படியும், ரோகித் சர்மா இந்த அணிகளில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறது. ஒன்று 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். அண்மையில், இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த பெருமையும் ரோகித் சர்மாவை சேரும். ஆதலால், ரோகித் சர்மாவுக்காக ஒவ்வொரு அணியும் போட்டி போடுகின்றன. ஒருவேளை ரோகித் சர்மா தக்க வைக்கப்படவில்லை என்றால், மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தக்க வைக்கப்படுவார்கள்.