ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறிவிட்டது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியும் ஃபைனலுக்கு முன்னேறிவிடும். கடைசி போட்டியில் ஜெயிக்காவிட்டாலும், இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என ஒயிட்வாஷ் செய்யாவிட்டால் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறும்.
கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம். தொடக்க வீரராக ஷுப்மன் கில் தான் ஆடுவார். அதில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
3வது டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட்ட முகமது ஷமி கடைசி டெஸ்ட்டில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷமியை ஆடவைக்கும் முனைப்பில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது. அவர் அணிக்குள் வந்தால் முகமது சிராஜ் வெளியேற்றப்படலாம். 3வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீசி முதல் இன்னிங்ஸில் அவர் வீசிய வெறும் 4 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார். எனவே அவர் நீக்கப்பட வாய்ப்பில்லை. சிராஜுக்கு பதிலாக ஷமி இறக்கப்படுவார். அந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்படும்.
Explainer: ICC WTC ஃபைனல்: இந்தியா-இலங்கை இடையே போட்டி! அனைத்துவிதமான சாத்தியக்கூறுகள், கணக்கீடுகள் ஓர் அலசல்
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.