#AUSvsIND முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இவர்கள் தான்..! உத்தேச ஆடும் லெவன்

First Published | Nov 26, 2020, 3:59 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை சிட்னியில் நடக்கவிருக்கும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது.
இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். ரோஹித் சர்மா ஆடாததால், ஷிகர் தவானுடன் மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குவார். கேப்டன் விராட் கோலியின் நிரந்தர பேட்டிங் ஆர்டர் 3. 4 மற்றும் ஐந்தாம் வரிசைகளில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் ஆட்டத்தின் சூழலை பொறுத்து இறங்கக்கூடும். விக்கெட் கீப்பர் ராகுல் தான்.
Tap to resize

ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜாவும், ஸ்பின்னராக சாஹலும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமியுடன் நவ்தீப் சைனி களமிறங்குவார்.
ஆஸி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:ஷிகர் தவான், மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஜஸ்ப்ரித் பும்ரா.

Latest Videos

click me!