சாஹா எல்லாம் ஒரு ஆளுன்னு ஆஸ்திரேலியால பிட்னெஸ் டெஸ்ட்.. நான் என்ன அவ்ளோ கேவலமா?? BCCI யுடன் மோதிய ரோஹித்..!

First Published | Nov 26, 2020, 8:47 AM IST

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் ஷர்மா, காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை என பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால், பிசிசிஐ இந்திய அணியை அறிவித்த சில நாட்களிலேயே மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மா களமிறங்கியது கடும் பரபரப்பை கிளப்பியது.
 

இன்னும் முழுமையாக ரோஹித் உடற்தகுதி பெறவில்லை என கிரிக்கெட் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரோஹித் டிசம்பர் மாதம் தான் ஆஸ்திரேலியா செல்ல முடியும். அதன் பின்னர் அவர் பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. பின் அங்குள்ள குவாரன்டைன் விதிமுறைகள் காரணமாக அவரால் முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது
ஒரு பக்கம் நிலைமை இப்படி இருக்கையில், மறுபக்கம் ரோஹித் ஷர்மாவை விட அதிகம் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த விருத்திமான் சஹா, டெஸ்ட் போட்டியில் களமிறங்க தயாராக உள்ளார். அவருக்கு இரண்டு இடங்களில் தசை பிடிப்பு இருந்த போதும், அவர் ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்டார்
Tap to resize

சாஹாவுக்கு இரண்டு இடங்களில் தசைப்பிடிப்பு இருந்தது. ஆனாலும், அவர் ஆஸ்திரேலியா அனுப்பப்பட்டார். ரோஹித் சர்மா தன் உடற்தகுதியை தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று தான் நிரூபிக்க வேண்டும் என்றால், அதே விதி சாஹாவுக்கு பொருந்தாதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது
தற்போது பிசிசிஐ அதிகாரிகள் சிலர் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியிலேயே இல்லை. அவர் ஆஸ்திரேலியா செல்வதாக பிசிசிஐயிடம் எந்த திட்டமும் இல்லை எனக் கூறி உள்ளது. அப்படி என்றால் அவரை ஏன் டெஸ்ட் அணியில் சேர்ப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்?
ரோஹித் சர்மாவை முதலில் ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை? அவரை பின்னர் அணியில் தேர்வு செய்து விட்டு, தற்போது ஏன் ஆஸ்திரேலியா அனுப்புவதில் சிக்கல் என சொல்ல வேண்டும்? ரோஹித் சர்மாவை நீக்க பிசிசிஐ மற்றும் சிலர் நாடகம் போடுகிறார்களா? இதற்கெல்லாம் விடை கிடைக்குமா?

Latest Videos

click me!