#AUSvsIND அவன் ஒரு டைப்பான ஆளு.. சாதா உத்திலாம் சரிப்பட்டு வராது..! ஸ்மித்தை வீழ்த்த சச்சின் கொடுக்கும் ஐடியா

First Published Nov 24, 2020, 4:28 PM IST

ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான 2018-2019 டெஸ்ட் தொடரில் ஸ்மித்தும் வார்னரும் ஆடவில்லை. அந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில், இம்முறை அவர்கள் ஆடுவதால், இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் மிகக்கடுமையான போட்டியாக இருக்கும்.
undefined
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் ஸ்மித், மரபார்ந்த பேட்டிங் ஸ்டைல் அல்லாத வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்துவது மிகக்கடினமான விஷயம். ஆனால் இங்கிலாந்தின் ஆர்ச்சர் மற்றும் நியூசிலாந்தின் வாக்னர் ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலர்களும் அதிகமான பவுன்ஸர்களை ஸ்மித்துக்கு வீசி, அவருக்கு நெருக்கடி கொடுத்ததுடன், பவுன்ஸரில் அதிகமான முறை அவரை வீழ்த்தவும் செய்தனர்.
undefined
எனவே பவுன்ஸர் ஸ்மித்தின் பலவீனமாக பார்க்கப்படுவதால் இந்திய பவுலர்களும் அதை செய்வார்கள். இந்நிலையில், வாக்னரை போல அனைத்து ஃபாஸ்ட் பவுலர்களாலும் பவுன்ஸர் மூலம் தனக்கு சிக்கலை ஏற்படுத்த முடியாது என்றும் இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் பவுன்ஸர்களை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் ஸ்மித் தெரிவித்திருந்தார்.
undefined
இந்நிலையில், ஸ்மித்தை வீழ்த்தும் உத்தி குறித்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார். இதுகுறித்து தி இந்துவிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், ஸ்மித் வித்தியாசமான பேட்டிங் டெக்னிக்கை கொண்டவர். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன்களுக்கு ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே, அதாவது 4வது ஸ்டம்ப் லைனில் வீசவேண்டும் என்போம். ஆனால்ன் ஸ்மித் நகர்ந்துகொண்டே இருப்பதால், அவருக்கு அந்த லைனில் வீசக்கூடாது. அதைவிட நான்கு அல்லது ஐந்து இன்ச்சுகள் விலக்கியே வீச வேண்டும். அவருக்கு ஆஃப் திசையில் கூடுதலாக நகர்த்தியே வீச வேண்டும். இதற்கு மனரீதியான அட்ஜெஸ்ட்மெண்ட் தான் முக்கியம்.
undefined
ஸ்மித் பவுன்ஸர்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியதாக படித்தேன். பவுலர்கள் அவருக்கு எதிராக கூடுதல் ஆக்ரோஷம் காட்டுவார்கள் என அவர் கருதுகிறார். ஆனாலும் ஸ்மித்துக்கு அரௌண்ட் ஆஃப் ஸ்டம்ப் பவுன்ஸர்களை வீசி, அவரை பரிசோதிக்க வேண்டும். அவரை பேக் ஃபூட் ஆடவைத்து தவறிழைக்க தூண்ட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!