#AUSvsIND 2வது டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு.. 2 வீரர்கள் அறிமுகம்; 4 அதிரடி மாற்றங்கள்..!

First Published | Dec 25, 2020, 1:12 PM IST

ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடாததால், ரஹானே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடைசி 3 போட்டிகளிலும் இந்திய அணியை ரஹானே தான் வழிநடத்துவார்.
ரஹானே தலைமையிலான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் டெஸ்ட்டில் படுமோசமாக சொதப்பிய தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு பதிலாக மற்றொரு இளம் வீரரான ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதான் ஷுப்மன் கில்லுக்கு அறிமுக டெஸ்ட் போட்டி.
Tap to resize

அதேபோல விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது சிராஜுக்கும் இதுதான் முதல் டெஸ்ட் போட்டி.
கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.கோலிக்கு மாற்று வீரராக ராகுல் சேர்க்கப்படுவார் என எண்ணப்பட்ட நிலையில், ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜாவை சேர்ப்பதன் மூலம் ஒரு பவுலிங் ஆப்சனும் கூடுதலாக கிடைக்கும் என்பதன் அடிப்படையில், அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஜடேஜா பேட்டிங்கிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நல்ல ஃபார்மில் தான் இருக்கிறார்.
ஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட்டுக்கான இந்திய அணி:மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.

Latest Videos

click me!