நடராஜனுக்கு ஒரு ரூல்; கோலிக்கு ஒரு ரூல்..! ஆள பொறுத்து ரூல்ஸ் மாறும்.. இந்திய அணி நிர்வாகத்தை விளாசிய கவாஸ்கர்

First Published Dec 24, 2020, 9:51 PM IST

இந்திய அணியில் வீரர்களை பொறுத்து விதிகள் மாறும் என்று இந்திய அணி நிர்வாகத்தை கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தோல்வியுடன் இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, 2வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. ஆனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் முக்கியமான 2 வீரர்களான கோலியும் ஷமியும் ஆடவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும்.
undefined
ஷமி காயத்தால் தொடரிலிருந்து விலக வேண்டிவந்தது. ஆனால் கேப்டன் விராட் கோலி, அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் கடைசி 3 போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்பினார். கோலி நாட்டுக்காக ஆடுவதைவிட, தனது தனிப்பட்ட விஷயத்திற்கு முன்னுரிமை கொடுத்தது குறித்த அவருக்கு ஆதரவான மற்றும் எதிரான என இருவேறு கருத்துகள் உள்ளன.
undefined
இந்நிலையில், இதுகுறித்து ஸ்போர்ட்ஸ்டாரில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், இந்திய அணியில் வீரர்களை பொறுத்து விதிகள் மாறும். ஐபிஎல் பிளே ஆஃபின்போதே நடராஜனுக்கு முதல் குழந்தை பிறந்தது. ஆனாலும் ஆஸி., தொடருக்கான நெட் பவுலராக எடுக்கப்பட்டிருந்த நடராஜன், ஆஸி.,க்கு செல்ல வேண்டும் என்பதற்காக, அவரது குழந்தையை பார்க்க அனுமதிக்காமல் ஆஸி.,க்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் இன்னும் அங்குதான் இருக்கிறார். ஜனவரி கடைசியில் தான் அவரது குழந்தையை அவர் பார்க்க முடியும். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியால், அவரது முதல் குழந்தையை உடனே பார்த்துவிட முடியும்.
undefined
அஷ்வின் ஒரு போட்டியில் பந்துவீசவில்லை என்றால், அடுத்த போட்டியில் நீக்கிவிடுவார்கள். ஆனால் அதே ஒரு டாப் பேட்ஸ்மேன் சரியாக ஆடவில்லை என்றால் நீக்கப்படமாட்டார். இந்திய அணியில் வீரர்களை பொறுத்து விதிகள் மாறும். நீங்கள் என்னை நம்பவில்லை என்றால், அஷ்வின் மற்றும் நடராஜனை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று கவாஸ்கர் காட்டமாக எழுதியுள்ளார்.
undefined
click me!