#AUSvsIND அவனுங்களுக்கு அவ்ளோ சீன்லாம் கிடையாது..! ஆஸி.,யின் பலவீனத்தை ஓபனா போட்டுத்தாக்கிய ஸ்ரீகாந்த்

First Published Dec 24, 2020, 7:05 PM IST

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அவ்வளவு வலுவானதெல்லாம் கிடையாது என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்த நிலையில், இனிவரும் போட்டிகளில் கோலியும் ஆடாததால், எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று இந்திய அணி இந்த தொடரில் ஒயிட்வாஷ் ஆகும் என்று மார்க் வாக் மற்றும் மைக்கேல் வான் ஆகிய முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.
undefined
இந்நிலையில், இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டு அசத்தும் என்றும், அதேவேளையில் ஆஸி., அணியின் பேட்டிங்கும் அந்தளவிற்கு வலுவாக இல்லாததை சுட்டிக்காட்டியுள்ளார் ஸ்ரீகாந்த்.
undefined
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிருஷ்ணமாச்சார் ஸ்ரீகாந்த், இந்திய அணியின் மனநிலை ரொம்ப டிஃபென்சிவாக இருந்தது. இந்திய அணி பாசிட்டிவான மனநிலையுடன் அடுத்தடுத்த போட்டிகளை அணுக வேண்டும். விராட் கோலியும் இல்லாத நிலையில், அது ரொம்ப கஷ்டம் தான். ஆனால் பாசிட்டிவான மனநிலையுடன் செம கம்பேக் கொடுத்து கடும் சவாலளிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மிகச்சிறந்ததெல்லாம் கிடையாது. ஆஸி., அணியின் பேட்டிங்கில் வார்னர் 30 சதவிகிதம், ஸ்மித் 30 சதவிகிதம், மற்றவர்கள் 30 சதவிகிதம்; அவ்வளவுதான். ஆஸி., அணியின் பேட்டிங் பலம் வாய்ந்ததெல்லாம் கிடையாது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
undefined
click me!