2021 ஐபிஎல்லில் இல்ல.. 2022ல் தான்..! பிசிசிஐ அதிரடி முடிவு

Published : Dec 24, 2020, 04:43 PM IST

கூடுதலாக 2 ஐபிஎல் அணிகளை சேர்ப்பது குறித்து பிசிசிஐ திடமான் முடிவெடுத்துள்ளது.  

PREV
13
2021 ஐபிஎல்லில் இல்ல.. 2022ல் தான்..! பிசிசிஐ அதிரடி முடிவு

ஐபிஎல் 13 சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஐபிஎல் 14வது சீசன் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அந்த சீசனை இந்தியாவில் நடத்தும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.

23

அடுத்த சீசனுக்கு கூடுதலாக 2 அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் படேல் ஸ்டேடியம் அமைந்துள்ள அகமதாபாத் ஒரு அணி மற்றும் மற்றொரு அணியாக கான்பூர் அல்லது லக்னோ அணி இருக்கலாம் என்று தகவல் வெளியானது.

33

ஆனால் 2021 ஐபிஎல்லில் 2 அணிகளை சேர்க்காமல், 2022ல் தான் கூடுதல் அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று நடந்த வருடாந்திர  பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில், கூடுதலாக 2 அணிகளை 2022 ஐபிஎல்லில் தான் சேர்ப்பதாக, கூட்டத்தில் முடிவெடுத்ததாக பிசிசிஐ தரப்பில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு, கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories