18 ஆண்டுகள் விராட் கோலியால் வெல்ல முடியாததை சாதித்துக் காட்டிய பச்சை தமிழன் தினேஷ் கார்த்திக்!!

Published : Jun 04, 2025, 09:49 AM IST

18 ஆண்டுகால போராட்டத்தில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றியை பலரும் கொண்டாடி வரும் நிலையில், வெற்றிக்கு பின்னால் இருக்கும் தமிழக வீரர் பற்றி தெரிந்து கொள்வோம்.

PREV
14
Dinesh Karthik

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடரில் 18 ஆண்டு கால போராட்டத்திற்கு தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை கோப்பையை வென்றதே இல்லை என்ற பெங்களூருவின் மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2025 ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே கோப்பை கனவுடன் களமாடிய RCBக்கு அது நனவாகி உள்ளது.

24
IPL 2025

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர் கொண்ட பெங்களூரு முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 190 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களம் இறங்கிய பஞ்சாப் அணி பரபரப்பான இறுதிக் கட்டத்தில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

34
IPL 2025 Champions RCB

பெங்களூரு அணியின் வெற்றியைத் தொடர்ந்து பெங்களூரு நகரம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து பெங்களூரு அணிக்காக மட்டும் விளையாடி வரும் விராட் கோலிக்காக கோப்பையைக் கைப்பற்றி கொடுத்த மகத்தான சாதனைப் படையில் தமிழக வீரர் முக்கியப் பங்காற்றி உள்ளார்.

44
Royal Challengers Bengaluru

பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளரான தினேஷ் கார்த்திக் தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர். இந்த தொடரில் பெங்களூரு அணிக்கான பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பு வகித்த தினேஷ் கார்த்திக் தனது பணியை முறையாக செய்துள்ளார் என்பதற்கு சான்று பெங்களூரு அணியின் கடந்து வந்த பாதையே சாட்சியாக உள்ளது. குறிப்பாக இந்தத் தொடரில் அந்த அணி பேட்டிங்கில் தனி சிறப்புடன் செயல்பட்டு வந்ததுக் குறிப்பிடத்தக்கது.

கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆன்டி பிளவர், பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக், பந்துவீச்சு பயிற்சியாளராக ஓம்கார் சல்வி பொறுப்பு வகிக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories