#AUSvsIND சோனி கிரிக்கெட் இங்கிலீஷ் சேனலில் தமிழில் பேட்டி..! பெருமைப்பட வைத்த யார்க்கர் நடராஜன்

First Published Dec 8, 2020, 9:27 PM IST

ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக பந்துவீசி மிரட்டிய தமிழகத்தை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் நடராஜன், சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் தமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பெருமைப்படை வைத்தார்.
 

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமமான சின்னப்பம்பட்டியில் பிறந்து ஆஸ்திரேலியாவையே அலறவிட்டார் இடது கை ஃபாஸ்ட் பவுலர் நடராஜன். ஐபிஎல் 13வது சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடி, தனது துல்லியமான யார்க்கர்கள் மற்றும் கட்டர்கள் மூலம் டெத் ஓவர்களில் அருமையாக வீசி, முன்னாள், இந்நாள் ஜாம்பவான்கள் அனைவரின் பாராட்டுகளையும் குவித்த நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான வலைப்பயிற்சி பவுலராக எடுக்கப்பட்டார்.
undefined
டி20 அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி காயத்தால் நீக்கப்பட்டதால், அந்த வாய்ப்பை பெற்றார் நடராஜன். 3வது ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான நடராஜன், கேப்டன் விராட் கோலியை கவரவே, 3 டி20 போட்டிகளிலும் நடராஜனை ஆடவைத்தார் கோலி.
undefined
கேப்டன் விராட் கோலியும் அணி நிர்வாகமும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை வீணடிக்காமல், முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன், 2வது போட்டியில் 2 விக்கெட்டுகளையும் 3வது டி20 போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். நடராஜன் வீழ்த்திய அனைத்து விக்கெட்டுகளுமே ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் வீழ்த்தப்பட்ட முக்கியமான விக்கெட்டுகள்.
undefined
2வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்டியா, அந்த விருதுக்கு தன்னைவிட நடராஜனே பொருத்தமானவர் என்று கூறினார். அதேபோலவே டி20 தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றபோது, அந்த விருதை நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார் ஹர்திக் பாண்டியா. கேப்டன் விராட் கோலியும் டி20 கோப்பையை நடராஜனிடம் கொடுத்தார்.
undefined
அறிமுக தொடரிலேயே அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அபாரமாக பந்துவீசி அனைவரின் பாராட்டுகளையும் குவித்த நடராஜன், சோனி சிக்ஸ் சேனலில் வர்ணனையாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான முரளி கார்த்திக்குடன் தமிழில் உரையாடினார். முரளி கார்த்திக், நடராஜனிடம் ஆஸ்திரேலியாவில் ஆடிய அனுபவம், பந்துவீச்சு உத்தி, எதிர்பார்ப்பு, இந்திய அணியில் ஆடியது ஆகியவை குறித்து தமிழில் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழிலேயே பதிலளித்தார் நடராஜன்.
undefined
ஆஸ்திரேலிய தொடர் குறித்து தமிழில் பேசிய நடராஜன், ஆஸ்திரேலியா வந்து மிகப்பெரிய அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் தொடரிலேயே சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. இந்த தொடரில் நான் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும்; அவ்வளவுதான். வலைப்பயிற்சி பவுலராகத்தான் ஆஸ்திரேலியாவிற்கு வந்தேன். சில காயம் காரணமாக அணியிலும், பின்னர் ஆடும் லெவனிலும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். ஐபிஎல்லில் இருந்த ஃபார்ம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. சக வீரர்கள் எனக்கு பெரியளவில் உதவியாக இருந்து ஊக்குவித்தனர்.
undefined
பவுலிங் குறித்து பெரிதாக யோசிக்கவோ குழப்பிக்கொள்ளவோ இல்லை. எனது யார்க்கர் மீதும் கட்டர்கள் மீதும் நம்பிக்கை வைத்திருந்தேன். பிட்ச்சின் தன்மை குறித்து கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரிடம் ஆலோசனை கேட்பேன். அவர்கள் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு, முழு ஈடுபாட்டுடன் எனது திறமையை வெளிப்படுத்தினேன். சிறுவயதிலிருந்தே ஆக்ரோஷமாக இருக்கமாட்டேன். எது நடந்தாலும் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்துவிட்டு சென்றுவிடுவேன். அது எனது இயல்புதானே தவிர, பெரிதாக ஒன்றும் இல்லை என்று தமிழில் தனது அடக்கமான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்.
undefined
click me!