அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல்லும் அரைசதம் அடிக்க, 19வது ஓவரில் மேத்யூ வேட் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 53 பந்தில் 80 ரன்கள் அடித்திருந்த வேடை ஷர்துல் தாகூர் அவுட்டாக்கினார். கடைசி ஓவரை வீசிய நடராஜன், 36 பந்தில் 54 ரன்கள் அடித்திருந்த மேக்ஸ்வெல்லை வீழ்த்தி, டெத் ஓவரில் அவரது அதிரடிக்கு இடம் கொடுக்காமல் ரன்னை கட்டுப்படுத்தினார். கடைசி ஓவரில் களத்திற்கு வந்து ஒரு சிக்ஸர் அடித்த ஷார்ட் 7 ரன்களுக்கு ரன் அவுட்டானார். கடைசி ஓவரை வீசிய, புதிய டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன், கடைசி ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடித்து, 187 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.