#AUSvsIND கடைசி வரை கொண்டுவந்து கைவிட்ட கோலி..! கடைசி டி20யில் ஆஸி., ஆறுதல் வெற்றி

First Published Dec 8, 2020, 5:42 PM IST

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்ற நிலையில், கடைசி டி20 போட்டி சிட்னியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
undefined
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச் 2வது ஓவரிலேயே வாஷிங்டன் சுந்தரின் பந்தில் டக் அவுட்டானார். இதையடுத்து களத்திற்கு வந்த ஸ்மித், பந்துக்கு நிகரான ரன் அடித்து(23 பந்தில் 24 ரன்கள்) வாஷிங்டன் சுந்தரின் பவுலிங்கில் நடையை கட்டினார்.
undefined
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் தொடக்கம் முதலே அடித்து ஆடி அரைசதம் அடித்த மேத்யூ வேட், வேகமாக ஸ்கோர் செய்ய அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து மேக்ஸ்வெல்லும் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்த, இருவருமே அடித்து ஆடியதால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல்லும் அரைசதம் அடிக்க, 19வது ஓவரில் மேத்யூ வேட் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 53 பந்தில் 80 ரன்கள் அடித்திருந்த வேடை ஷர்துல் தாகூர் அவுட்டாக்கினார். கடைசி ஓவரை வீசிய நடராஜன், 36 பந்தில் 54 ரன்கள் அடித்திருந்த மேக்ஸ்வெல்லை வீழ்த்தியதுடன் கடைசி ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடித்தது.
undefined
ஆனாலும் கோலி களத்தில் நின்றதால் இந்திய அணிக்கு நம்பிக்கையிருந்தது. அந்த கடைசி நம்பிக்கையையும் 19வது ஓவரின் முதல் பந்திலேயே தகர்த்தார் ஆண்ட்ரூ டை. 61 பந்தில் 85 ரன்கள் அடித்திருந்த கோலியை டை வீழ்த்த, கடைசியில் ஷர்துல் தாகூர் 7 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 17 ரன்கள் அடித்தும், இந்திய அணியால் 20 ஓவரில் 174 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
undefined
ఆస్ట్రేలియాపై 3000 పరుగులు కూడా పూర్తిచేసుకున్న విరాట్ కోహ్లీ... టీ20ల్లో 300 సిక్సర్లు పూర్తిచేసుకున్నాడు.
undefined
click me!