Varun Chakaravarthy will threat New Zealand in Champions Trophy 2025 Final : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி நியூசிலாந்துக்கு மிகப்பெரிய "அச்சுறுத்தலாக" இருப்பார் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் சையத் கிரமானி நம்புகிறார்.
Varun Chakaravarthy will threat New Zealand : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவின் மர்ம சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி நியூசிலாந்துக்கு மிகப்பெரிய "அச்சுறுத்தலாக" இருப்பார் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் சையத் கிரமானி நம்புகிறார். விறுவிறுப்பான சூழ்நிலையில் ரசிகர்கள் நிறைந்திருக்க, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கோப்பையை வெல்ல ஞாயிற்றுக்கிழமை துபாயில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதற்கு முன்பு குருப் ஏ பிரிவின் நியூசிக்கு எதிரான 12ஆது போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் இந்தியா நம்பிக்கையுடன் களமிறங்கும்.
26
Ind vs Nz Final, Champions Trophy 2025 Final, Varun Chakaravarthy
இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடி வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றிக்கு சக்கரவர்த்தி தான் காரணம். அவர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை தனது மாறுபட்ட பந்துவீச்சால் திணறடித்தார். சக்ரவர்த்தி நியூசிலாந்து அணியின் நடு மற்றும் கீழ் வரிசை வீரர்களை வீழ்த்தி 10 ஓவர்களில் 5/42 ரன்களைக் கொடுத்து அசத்தினார். திறமையான நியூசிலாந்து அணிக்கு இந்த சுழற்பந்து வீச்சாளர் தொல்லை கொடுப்பார் என்று கிரமானி எதிர்பார்க்கிறார்.
36
Team India, Syed Kirmani, ICC Champions Trophy 2025 Final, Varun Chakaravarthy
"எங்களிடம் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். வருண் சக்ரவர்த்தி என்ற பந்துவீச்சாளரும் இருக்கிறார். அவர் நியூசிலாந்துக்கு எதிரான முந்தைய போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். நியூசிலாந்துக்கு அவர் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று நினைக்கிறேன். நியூசிலாந்து ஒரு திறமையான அணி," என்று கிரமானி ANI இடம் கூறினார்.
46
Varun Chakaravarthy, Rohit Sharma, New Zealand Cricket Team
துபாய் ஆடுகளம் பாகிஸ்தான் போல அதிக ரன்கள் குவிக்க ஏற்றதாக இல்லை. ஆடுகளம் முன்பு போல் செயல்படும் என்று பலர் எதிர்பார்த்தாலும், 300 ரன்களுக்கு மேல் எடுக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கிரமானி நம்புகிறார். "இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தாலும் அவர்கள் எவ்வளவு ரன்கள் எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஆனால் இரு அணிகளும் 300 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.