இதற்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவ், ''எங்களின் மனநிலை தெளிவாக உள்ளது. போட்டியை நாங்கள் விளையாட மறுக்கவில்லை. அது மறுபக்கத்தில் (பாகிஸ்தான்) இருந்து வந்துள்ளது. ஐசிசி அதிகாரப்பூர்வ அட்டவணையை தேர்வு செய்துள்ளது. போட்டியை நடத்த நடுநிலையான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிசிசிஐ மற்றும் நமது அரசு இதற்கு ஒத்துழைத்துள்ளது. நாங்கள் நிச்சயம் கொழும்பு செல்வோம். இப்போதைக்கு எங்களின் எண்ணம் முதல் போட்டியை (பிப்ரவரி 7ம் தேதி அமெரிக்காவுக்கு எதிராக) எதிர்கொள்வது தான். அதன்பிறகு கொழும்பு செல்வோம்'' என்றார்.
வாஷிங்டன் சுந்தர் காயம்
மேலும் இந்திய அணியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேர்வு செய்வதில் அணி அவசரம் காட்டவில்லை என்று சூர்யகுமார் யாதவ் உறுதிப்படுத்தினார்.
ஜனவரி 11 அன்று வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது வாஷிங்டன் சுந்தார் காயம் அடைந்தார். அவர் காயம் குணமாகவில்லை என கூறப்படுகிறது. மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை.