டி20ல் மாஸ் – அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த மிஸ்டர் 360 டிகிரி சூர்யகுமார் யாதவ்!

First Published | Apr 12, 2024, 1:00 PM IST

ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

MI vs RCB

காயத்திலிருந்து மீண்டு வந்த சூர்யகுமார் யாதவ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 20ஆவது லீக் போட்டியின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு திரும்ப வந்தார். ஏற்கனவே ஹாட்ரிக் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் இந்தப் போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடியது.

Suryakumar Yadav

ரசிகர்கள் மற்றும் மும்பை வீரர்களின் கவனம் முழுவதும் சூர்யகுமார் யாதவ் மீது இருந்தது. ஆனால், அவர், 2ஆவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 29 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றது.

Tap to resize

Suryakumar Yadav, Mumbai Indians

இந்த வெற்றியின் மூலமாக முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியை தொடர்ந்து நேற்று 25ஆவது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஆர்சிபி அணியை எதிர்கொண்டது.

Suryakumar Yadav, Mumbai Indians

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. பின்னர், பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். அவர், 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 8.5 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்திருந்தது.

MI vs RCB, IPL 25th Match

அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினர். ஏற்கனவே தனது முதல் போட்டியில் ரன் ஏதும் இல்லாமல் வெளியில் சென்ற நிலையில், அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வந்தது முதலே அதிரடி காட்டத் தொடங்கினார். முதல் பந்திலேயே 2 ரன்கள் எடுத்தார். 5ஆவது பந்தில் சூர்யகுமார் யாதவ், பவுண்டரி விரட்டினார். 7ஆவது பந்தில் சிக்ஸர் விளாசினார். மேலும், 9 மற்றும் 10ஆவது பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர் விரட்டினார்.

Mumbai Indians, IPL 2024

கடைசியில் 17 பந்துகளில் 52 ரன்களில் குவித்து அதிவேகமாக அரைசதம் அடித்தார். இதில், 5 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும். எனினும் அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.

Suryakumar Yadav Fastest Half Century

இதற்கு முன்னதாக,

16 பந்துகள் – இஷான் கிஷான் vs SRH, 2021

17 பந்துகள் – கெரான் போலார்டு vs KKR, 2016

17 பந்துகள் – இஷான் கிஷான் vs KKR, 2018

17 பந்துகள் – கெரான் போலார்டு vs CSK, 2021

17 பந்துகள் – ஹர்திக் பாண்டியா vs KKR, 2019

17 பந்துகள் – சூர்யகுமார் யாதவ் vs RCB, 2024

Latest Videos

click me!