ஆர்சிபியை ஓட ஓட விரடடியடித்த இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் - மும்பைக்கு கிடைத்த 2ஆவது வெற்றி!

First Published Apr 11, 2024, 11:37 PM IST

ஆர்சிபிக்கு எதிரான 25ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

Mumbai Indians vs Royal Challengers Bengaluru, 25th Match

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் பாப் டூப் ளெசிஸ் 61, ரஜத் படிதார் 50 மற்றும் தினேஷ் கார்த்திக் 53* ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.

Mumbai Indians vs Royal Challengers

மும்பை அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆரம்பம் முதலே இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

Mumbai Indians vs Royal Challengers Bengaluru, 25th Match

இதில் 5 பவுண்டரி, 3 சிக்ஸ் அடங்கும். கிஷான் 34 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸ் உள்பட 69 ரன்கள் சேர்த்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில் அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் போட்டியில் அடித்துள்ளார்.

MI vs RR, Live Score

அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். கடைசியில் 19 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆரம்பத்தில் அதிரடியாக தொடங்கினாலும், பின்னர் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 24 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 38 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதியாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 21 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற செய்தார்.

கடைசியில் மும்பை இந்தியன்ஸ் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் 2ஆவது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திலிருந்து 7ஆவது இடத்திற்கு முன்னேறியது.

click me!