ஆர்சிபியின் சொக்க தங்கம் – சுத்தி சுத்தி வேடிக்கை காட்டிய தினேஷ் கார்த்திக் – 196 ரன்கள் குவித்த ஆர்சிபி!

First Published | Apr 11, 2024, 9:44 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 25ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.

Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

RCB, IPL 2024

அதன்படி ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கோலி 3 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து அறிமுக வீரராக களமிறங்கிய வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார்.

Tap to resize

MI vs RCB, IPL 25th Match

இதையடுத்து கேப்டன் பாப் டூப் ளெசிஸ் உடன் ரஜத் படிதார் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதில், படிதார் 26 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 50 ரன்கள் எடுத்து ஜெரால்டு கோட்ஸி பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

Mumbai Indians vs Royal Challengers Bengaluru, 25th Match

பொறுப்பை உணர்ந்து விளையாடிய பாப் டூப் ளெசிஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அவர் அடித்த முதல் அரைசதம் இதுவாகும். தினேஷ் கார்த்திக் மட்டும் நின்று விளையாடினார்.

Mumbai Indians vs Royal Challengers Bengaluru, 25th Match

ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மஹிபால் லோம்ரார் 0, வைஷாக் விஜயகுமார் 0, சௌரவ் சௌகான் 9 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

Jasprit Bumrah, IPL 2024

இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கை பொறுத்த வரையில் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

MI vs RCB, IPL 25th Match

ஆர்சிபிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை தனதாக்கினார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். ஜெரால்டு கோட்ஸி, ஆகாஷ் மத்வால், ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Latest Videos

click me!