எங்க தோற்றதாக நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கடைசி பந்துல என்று காமெடியாக பதிலளித்த சஞ்சு சாம்சன்!

Published : Apr 11, 2024, 12:47 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது லீக் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் தோல்விக்கான காரணம் குறித்து காமெடியாக பதிலளித்துள்ளார்.

PREV
17
எங்க தோற்றதாக நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கடைசி பந்துல என்று காமெடியாக பதிலளித்த சஞ்சு சாம்சன்!
RR vs GT 24th IPL Match

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 24ஆவது ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. மழையின் காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து டாஸ் போடப்பட்டு குஜராத் பவுலிங் தேர்வு செய்தது. ஒரு கேப்டனாக சஞ்சு சாம்சன் தனது 50ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடினார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடியால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.

27
Rajasthan Royals vs Gujarat Titans, 24th Match

பின்னர் கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சாய் சுதர்சன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ வேட், அபினவ் மனோகர் ஒரு ரன்னில் நடையை கட்டினர். விஜய் சங்கர் 16 ரன்களில் வெளியேறினார்.

37
RR vs GT, Live Score

அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில் இந்தப் போட்டியில் 27 ரன்கள் எடுத்த நிலையில், 24 வயது 215 நாட்களில் 3000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். சஞ்சு சாம்சன் 26 வயது 320 நாட்களில் 3000 ரன்களை கடந்துள்ளார். தொடர்ந்து விளையாடிய கில் 44 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

47
Rajasthan Royals vs Gujarat Titans, 24th Match

குஜராத் 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்திருந்தது. கடைசியாக 30 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. 16ஆவது ஓவரை சஹால் வீசினார். அந்த ஓவரில் 13 ரன்கள் எடுக்கப்பட்டது. அஸ்வின் வீசிய 17ஆவது ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. 18ஆவது ஓவரில் ஆவேஷ் கான் 7 ரன்கள் கொடுத்த நிலையில், 19ஆவது ஓவரை வீசிய குல்தீப் சென் அந்த ஓவரில் 2 வைடு, ஒரு நோபால் உள்பட 20 ரன்கள் கொடுத்தார்.

57
Sanju Samson

இதன் காரணகாக கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரஷீத் கான் பவுண்டரி அடித்தார். 2ஆவது பந்தில் 2 ரன்னும், 3ஆவது பந்தில் பவுண்டரியும் விளாசினார். 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க, 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷீத் கான் பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.

67
Rajasthan Royals, Sanju Samson

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தோல்விக்கு பிறகு பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனிடம் எங்க தோல்வி அடைந்தீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜாலியாக கடைசி பந்தில் என்று பதிலளித்தார். உண்மையாகவா? என்று கேட்க, அதற்கு ஆமாம், ஒரு தோல்வி அடைந்த ஒரு கேப்டனாக இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது ரொம்பவே கடினம்.

77
RR vs GT, 24th IPL Match

இந்த தருணத்தில் கடைசி சில ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பாராட்டு சொல்ல வேண்டும். இந்த போட்டியில் என்ன தவறு செய்தோம் என்பதை அடுத்த போட்டிகளில் திருத்திக் கொள்ள வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றிக்கான ஸ்கோரை தான் நாங்கள் எடுத்திருந்தோம். ஆனால், விக்கெட் கடினமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories