Rohit Sharma, IPL 2024
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 25ஆவது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.
Mumbai Indians, IPL 2024
அதிகபட்சமாக கேப்டன் பாப் டூ ப்ளெசிஸ் 61 ரன்களும், தினேஷ் கார்த்திக் 53 ரன்களும், ரஜத் படிதார் 50 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 197 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Rohit Sharma 100 T20 Sixes in Wankhede Stadium
இதில், இஷான் கிஷான் தொடக்க முதலே அதிரடியாக விளையாடி 7 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 69 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 24 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Rohit Sharma, Mumbai Indians IPL 2024
இந்தப் போட்டியில் 3 சிக்ஸர் அடித்ததன் மூலமாக ஒரே மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 97 சிக்ஸர்கள் விளாசியிருந்த ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Rohit Sharma 100 Sixes at Wankhede Stadium
கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் இது போன்ற ஒரு சாதனையை இந்த மைதானம் மட்டுமின்றி வேறு எந்த மைதானத்திலும் நிகழ்த்தியதில்லை. மேலும், ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸரும் விளாசியிருக்கிறார்.
MI, IPL 2024
இதில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 49 சிக்ஸர்கள் விளாசிய ஹிட்மேன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 38 சிக்ஸர்களும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 37 சிக்ஸர்களும் விளாசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mumbai Indians, Rohit Sharma
இந்த ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. ஆரம்பத்தில் விளையாடிய 3 போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்தது.
Rohit Sharma
டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியோடு புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியது. கடைசியாக ஆர்சிபிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியைத் தொடர்ந்து வரும் 14 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.