ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவிட இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டனுக்கான தகுதி சுப்மன் கில்லிடம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், 2011 உலகக் கோப்பை வென்றவருமான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், அவருக்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இளம் இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.