சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்களது வெற்றிக்கணக்கை தொடங்கிய நிலையில், டெல்லி அணி மட்டும் இன்னும் வெற்றி பெறவில்லை.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஏற்கனவே தனது வெற்றியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் தற்போது ஹாட்ரிக் வெற்றிக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளன. ஐபிஎல் 2023 புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9ஆவது இடத்திலும் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இதுவரையில் ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் ஆரம்பத்தில் அந்தந்த அணிகள் வெற்றி பெற்றன. அதன் பிறகு நடந்த போட்டிகளில் எதிரணியே வெற்றி கண்டுள்ளன. ஆனால், இப்போது 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் அணிகள் தான் வெற்றி பெறுகின்றன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
நேற்று பெங்களூரு மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி 226 ரன்கள் எடுத்த நிலையில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கும் நிலையில், இந்தப் போட்டியில் மும்பை அணி ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ்
இந்த மைதானத்தில் நடந்த 2 போட்டிகளில் ஒன்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி கண்டது. இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய விரும்பும்.
மும்பை இந்தியன்ஸ்
பேட்டிங்கிற்கு சாதமான இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் க்ரீன், டிம் டேவிட் என்று நட்சத்திர வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடைசி வரை இவர்கள் மட்டும் களத்தில் நின்றால் போதும் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக 200 ரன்களுக்கு மேல் குவிக்கும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இதே போன்று ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக், மாயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், அபிஷேக் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதே போன்று பந்து வீச்சிலும் மாயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் மற்றும் என் நடராஜன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இதுவரையில் நடந்த 19 போட்டிகளில் ஹைதராபாத் அணி 19 போட்டிகளிலும், மும்பை அணி சூப்பர் ஓவர் போட்டி உள்பட 10 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக விளையாடிய போட்டியில் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையில் நடந்த கடைசி 5 போட்டிகளில் மும்பை 3 போட்டியிலும், ஹைதராபாத் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஹைதராபாத் மைதானத்தில் நடந்த 7 போட்டிகளில் ஹைதராபாத் 4 போட்டியில் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இன்று நடக்கும் ராஜீவ் காந்தி மைதானத்தில் இதுவரையில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 31 போட்டிகளில் வெற்றியும், 15 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. ஹைதரபாத் அணிக்கு எதிராக மும்பை அதிகபட்சமாக 235 ரன்கள் எடுத்துள்ளது. இதே போன்று மும்பைக்கு எதிராக ஹைதராபாத் 193 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக ஹைதராபாத் 96 ரன்கள் எடுத்துள்ளது. இதே போன்று மும்பை குறைந்தபட்சமாக 87 ரன்கள் எடுத்துள்ளது.