IPL 2023: ஹாட்ரிக் வெற்றிக்கு போட்டி போடும் மும்பை - ஹைதராபாத் மோதல்; உத்தேச ஆடும் 11!

Published : Apr 18, 2023, 11:26 AM IST

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

PREV
111
IPL 2023: ஹாட்ரிக் வெற்றிக்கு போட்டி போடும் மும்பை - ஹைதராபாத் மோதல்; உத்தேச ஆடும் 11!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்களது வெற்றிக்கணக்கை தொடங்கிய நிலையில், டெல்லி அணி மட்டும் இன்னும் வெற்றி பெறவில்லை. 

211
மும்பை இந்தியன்ஸ்

ஏற்கனவே தனது வெற்றியை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் தற்போது ஹாட்ரிக் வெற்றிக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது.

311
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளன. ஐபிஎல் 2023 புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9ஆவது இடத்திலும் உள்ளது.

411
மும்பை இந்தியன்ஸ்

இதுவரையில் ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் ஆரம்பத்தில் அந்தந்த அணிகள் வெற்றி பெற்றன. அதன் பிறகு நடந்த போட்டிகளில் எதிரணியே வெற்றி கண்டுள்ளன. ஆனால், இப்போது 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் அணிகள் தான் வெற்றி பெறுகின்றன.

511
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நேற்று பெங்களூரு மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி 226 ரன்கள் எடுத்த நிலையில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கும் நிலையில், இந்தப் போட்டியில் மும்பை அணி ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

611
மும்பை இந்தியன்ஸ்

இந்த மைதானத்தில் நடந்த 2 போட்டிகளில் ஒன்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி கண்டது. இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய விரும்பும்.

711
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பேட்டிங்கிற்கு சாதமான இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் க்ரீன், டிம் டேவிட் என்று நட்சத்திர வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடைசி வரை இவர்கள் மட்டும் களத்தில் நின்றால் போதும் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக 200 ரன்களுக்கு மேல் குவிக்கும்.

811
ஹாரி ப்ரூக்

இதே போன்று ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக், மாயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், அபிஷேக் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

911
ரோகித் சர்மா

இதே போன்று பந்து வீச்சிலும் மாயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் மற்றும் என் நடராஜன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

1011
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச ஆடும் 11:

ஹாரி ப்ரூக், மாயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மாயங்க் மார்க்கனே, உம்ரான் மாலிக் மற்றும் நடராஜன்.

1111
மும்பை இந்தியன்ஸ் உத்தேச ஆடும் 11:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ரித்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், ரிலே மெரிடித்

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories