#SRHvsRCB வெளிநாட்டு வீரர் அதிரடி மாற்றம்..! கட்டாயத்தின் பேரில் மற்றொரு மாற்றம்.. உத்தேச சன்ரைசர்ஸ் அணி

First Published | Apr 14, 2021, 2:23 PM IST

ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. ஆர்சிபி அணி மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கிய நிலையில், சன்ரைசர்ஸ் அணி முதல் போட்டியில் கேகேஆரிடம் தோற்றது.
வெற்றியுடன் சீசனை தொடங்கிய ஆர்சிபி அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும், முதல் போட்டியில் தோற்ற சன்ரைசர்ஸ் முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும் மோதுகின்றன.
Tap to resize

சென்னையில் நடக்கும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் ஆடிய முகமது நபி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சரியாக செயல்படாத நிலையில், ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் களமிறக்கப்படலாம்.
முகமது நபி ஸ்பின் ஆல்ரவுண்டர்; ஹோல்டர் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர். எனவே நபிக்கு பதிலாக ஹோல்டர் ஆடும்பட்சத்தில், மற்றொரு ஸ்பின்னர் தேவை என்பதால் ஷபாஸ் நதீம் ஆடலாம். ஷபாஸ் நதீம் சேர்க்கப்படுவதால் சந்தீப் ஷர்மா நீக்கப்படலாம்.
உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:டேவிட் வார்னர்(கேப்டன்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ஹோல்டர், விஜய் சங்கர், அப்துல் சமாத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், ஷபாஸ் நதீம், டி.நடராஜன்.

Latest Videos

click me!