#SRHvsRCB ஆர்சிபி அணியின் முக்கியமான வீரர் கம்பேக்.. செம குஷியில் கோலி&கோ..! உத்தேச ஆடும் லெவன்

First Published | Apr 14, 2021, 1:54 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆர்சிபி அணியை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. ஆர்சிபி அணி மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கிய நிலையில், சன்ரைசர்ஸ் அணி முதல் போட்டியில் கேகேஆரிடம் தோற்றது.
வெற்றியுடன் சீசனை தொடங்கிய ஆர்சிபி அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும், முதல் போட்டியில் தோற்ற சன்ரைசர்ஸ் முதல் வெற்றியை பெறும் முனைப்பிலும் மோதுகின்றன.
Tap to resize

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த தேவ்தத் படிக்கல், முன்னெச்சரிக்கை காரணமாக முதல் போட்டியில் ஆடாத நிலையில், இன்றைய போட்டியில் படிக்கல் ஆடுகிறார். கடந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடி ஆர்சிபி அணிக்காக பல நல்ல தொடக்கங்களை அமைத்து கொடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்தவர் படிக்கல். எனவே அவர் விராட் கோலியுடன் தொடக்க வீரராக களமிறங்குவது ஆர்சிபி அணிக்கு வலுசேர்க்கும்.
படிக்கல் அணிக்கு திரும்புவதால் ஷபாஸ் அகமது அணியிலிருந்து நீக்கப்படுவார். இந்த ஒரு மாற்றத்தை தவிர ஆர்சிபி அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
உத்தேச ஆர்சிபி அணி:விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், ரஜாத் பட்டிதர், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

Latest Videos

click me!