ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பையில் நடக்கும் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சஞ்சு சாம்சன் வழிநடத்துகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திவந்த முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அந்த அணி இந்த சீசனில் கழட்டிவிட்டதால், புதிய கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமித்தது. அந்தவகையில், இந்த சீசனில் சாம்சன் ராஜஸ்தான் அணியை வழிநடத்துகிறார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இந்த போட்டிதான், ஐபிஎல்லில் சாம்சன் கேப்டன்சி செய்யும் முதல் போட்டி.
ஐபிஎல்லில் சாம்சனுக்கு 108வது போட்டி இது. கேப்டனாவதற்கு முன் 107 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார் சாம்சன். ஐபிஎல்லில் கேப்டனாவதற்கு முன் அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் பொல்லார்டு(137 போட்டிகள்), அஷ்வின்(111 போட்டிகள்) ஆகிய இருவருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார் சஞ்சு சாம்சன்(107).