ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 8 மற்றும் 9ம் இடங்களில் இருக்கும் கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
25
இந்த சீசனில் இந்த 2 அணிகளுமே படுமோசமாக ஆடி தோல்விகளை தழுவிவரும் நிலையில், இந்த 2 அணிகளும் இனிமேல் பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியாது என்பதால் இந்த போட்டி புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
35
இன்று ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் கேகேஆர் அணியில் நாராயண் ஜெகதீசன் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை. 2வது பேட்டிங் ஆடினால் இம்பேக்ட் பிளேயராக ஆட வாய்ப்புள்ளது. அவருக்கு தொடர் வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும், அந்த வாய்ப்புகளை ஜெகதீசன் சரியாக பயன்படுத்தவில்லை. அதன்விளைவாக கேகேஆர் அணி, ஜேசன் ராய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரையும் தான் தொடக்க வீரர்களாக இறக்கிவிடும்.