பஞ்சாப்பை பந்தாடிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான்: கடைசில வந்து வின்னிங் ஷாட் கொடுத்த திலக் வர்மா!

First Published | May 3, 2023, 11:17 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 46ஆவது ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் தனது நண்பரான ஷிகர் தவானிடம் என்ன செய்யவது என்று கேட்டார். அதற்கு அவரோ பவுலிங் என்று சொல்லவே, ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். இது ரோகித் சர்மாவின் 200ஆவது ஐபிஎல் போட்டியாகும்.

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராப்சிம்ரன் சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 30 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேத்யூ ஷார்ட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் இணைந்து பஞ்சாப் அணிக்கு ரன்கள் சேர்த்தனர்.
 


பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 53 பந்துகளில் 119 ரன்கள் குவித்தனர். இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

இதே போன்று ஜித்தேஷ் சர்மா 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உள்பட 49 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டும், அர்ஷாத் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா டக் அவுட்டில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 23 பந்துகளில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இஷான் கிஷான் உடன் இணைந்த இம்பேக்ட் பிளேயர் சூர்யகுமார் யாதவ் வான வேடிக்கை காட்டினார். அவர் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதே போன்று தொடக்க வீரர் இஷான் கிஷானும் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

சாம் கரண் வீசிய 12ஆவது ஓவரில் 6, 6, 4, 4 அடித்தார். இறுதியாக அவர் 31 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் குவித்துஅ நாதன் எல்லீஸ் ஓவரில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்பட 75 ரன்கள் குவித்து அர்ஷ்தீப் சிங் ஓவரில் ஆட்டமிழந்தார்

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

அதன் பிறகு டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் களமிறங்கியுள்ளனர். திலக் வர்மா மைதானம் முழுவதும் 360 டிகிரி போன்று விட்டு விளாசினார். அவர், 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரில் உள்பட 26 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 216 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியது. 9 போட்டிகளில் 5 வெற்றியும், 4 தோல்வியும் அடைந்துள்ளது. பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.

Latest Videos

click me!