இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் இடத்தை இழந்துவிட்ட அஷ்வின், ஐபிஎல்லில் பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு, தேர்வாளர்களுக்கு நெருக்கடியளிக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவரும் ரவிச்சந்திரன் அஷ்வின், 13 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 10 இன்னிங்ஸ்களில் 30.50 என்ற சராசரி, 146.40 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 183 ரன்கள் அடித்துள்ளார்.