IND vs SA: இந்திய அணியின் ஆடும் லெவன்..! அறிமுக வீரருக்கு நேரடியாக ஆடும் லெவனில் இடம்..?

Published : May 23, 2022, 02:14 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.  

PREV
18
IND vs SA: இந்திய அணியின் ஆடும் லெவன்..! அறிமுக வீரருக்கு நேரடியாக ஆடும் லெவனில் இடம்..?

ஐபிஎல் 15வது சீசன் வரும் 29ம் தேதி முடிவடைகிறது. ஐபிஎல் முடிந்ததும், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூன் 9 முதல் 19 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது.
 

28

இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

38

இந்திய டி20 அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
 

48

இந்த அணியிலிருந்து தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. கேப்டன் கேஎல் ராகுலுடன் ருதுராஜ் கெய்க்வாட்டை தொடக்க வீரராகவும், 3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரையும் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, 4ம் வரிசை வீரராக ஐபிஎல்லில் நன்றாக ஆடிவரும் தீபக் ஹூடாவையும் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டையும் தேர்வு செய்துள்ளார்.

58

காயத்திலிருந்து மீண்டு வந்து முழு ஃபிட்னெஸுடன் மட்டுமல்லாது யாருமே எதிர்பார்த்திராத விதமாக ஐபிஎல்லில் கேப்டன்சியிலும் அசத்திவரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

68

ஸ்பின்னராக அக்ஸர் படேல் ஒருவரை மட்டும் தேர்வு செய்துள்ள சோப்ரா, ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோருடன் உம்ரான் மாலிக் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். 

78

ஐபிஎல்லில் அதிவேகமாக பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அல்லு தெறிக்கவிட்டு இந்திய அணியில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள உம்ரான் மாலிக்கை நேரடியாக ஆடும்லெவனில் இறக்கிவிட வேண்டும் என்பது ஆகாஷ் சோப்ராவின் கருத்து.
 

88

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான்.
 

Read more Photos on
click me!

Recommended Stories