உள்ளூர் போட்டிகளில் விராட், ரோகித்க்கு மட்டும் சிறப்பு சலுகையா? முன்னாள் கேப்டன் கடும் அதிருப்தி

First Published Aug 19, 2024, 11:19 PM IST

செப்டம்பர் 5ம் தேதி துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இதில் விளையாடி ரோகித் மற்றும் கோலிக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Virat Kohli, Rohit Sharma

துலீப் டிராபி 2024 இல் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். வங்கதேசத்துடனான டெஸ்ட் தொடரில் முக்கிய பேட்ஸ்மேன்கள் போட்டி பயிற்சி இல்லாமலேயே பங்கேற்பார்கள் என்று கூறினார். 

Kohli, Rohit

இருப்பினும், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பிசிசிஐ ஓய்வு அளித்ததை கவாஸ்கர் பாராட்டினார். பும்ராவுக்கு ஓய்வு அளித்தது நேர்மறையான விஷயம் என்று கூறினார். ஆனால், விராட், ரோகித் ஆகியோரை தேர்வு செய்திருக்க வேண்டும் என்றார். 

Latest Videos


ரோகித், விராட் இருவரும் உள்ளூர் போட்டிகளுக்கு தேர்வாகியிருக்க வேண்டும், ஏனெனில் போட்டி நேரத்தைப் பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கும், அவர்களின் உடற்தகுதியை கவனமாகப் பார்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று கருத்து தெரிவித்தார். ஒரு வீரர் 30 வயதைத் தாண்டும்போது தசைகள் பலவீனமடையாமல் இருக்க தினமும் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றார். 

Virat Kohli

சுனில் கவாஸ்கரின் கட்டுரையில்.. "தேர்வாளர்கள் துலீப் டிராபிக்கு ரோகித் சர்மா, விராட் கோலியை தேர்வு செய்யவில்லை. எனவே போட்டி பயிற்சி இல்லாமலேயே வங்கதேசத்துடனான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். ஆனால், பேட்ஸ்மேன் பிட்ச்சில் சிறிது நேரம் செலவிட வேண்டும். ஒரு விளையாட்டு வீரர் எந்தவொரு விளையாட்டிலும் 30 வயதைத் தாண்டிய பிறகு, வழக்கமான போட்டிகள் அவர் நிர்ணயித்த உயர் தரத்தை பராமரிக்க உதவும்" என்று குறிப்பிட்டார். 

Rohit Sharma

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் முறையே 2012, 2016 ஆம் ஆண்டுகளில் தங்கள் கடைசி உள்ளூர் போட்டிகளில் விளையாடினர். சமீபத்தில் இலங்கையுடனான மூன்று ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா 58, 64, 35 ரன்கள் எடுத்தார், கோலி முறையே 24, 14, 20 ரன்கள் எடுத்தார். விராட் கோலி இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகினார். ஜனவரி 2024 இல் தென்னாப்பிரிக்காவுடனான தனது கடைசி டெஸ்டில் விளையாடினார். அங்கு 46, 12 ரன்கள் எடுத்தார்.

click me!