ஹாரி ப்ரூக்
கொல்கத்தான் ஹோம் மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 19 ஆவது ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பவுலிங் தேர்வு செய்தார்.
ஹாரி ப்ரூக்
அதன்படி ஹாரி ப்ரூக் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆனால், மாயங்க் அகர்வால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் த்ரிபாதியும் 9 ரன்னில் அவுட்டானார். அதன் பிறகு மார்க்ரம் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா 32 ரன்களில் வெளியேறினார்.
ஹாரி ப்ரூக்
கடந்த 3 போட்டிகளில் மொத்தமாக 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் ப்ரூக், கேப் பார்த்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரன்கள் சேர்த்து வருகிறார். ஓபனிங் இறங்கிய அவர் 55 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகள் உள்பட ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தை அடித்து சாதனை படைத்தார். அவர் சதம் அடித்ததை காதலி நேரில் கண்டு ரசித்துள்ளார்.
ஹாரி ப்ரூக்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் ரூ.13.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ப்ரூக், இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடி 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது.
ஹாரி ப்ரூக்
அடுமட்டுமின்றி பேட்டிங்கிற்கு சாதகமான இந்த கொல்கத்தா மைதானத்தில் தொடக்க வீரராக களமிறங்கி இப்படியொரு சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் சதம் அடித்திருந்த நிலையில், தற்போது 3ஆவதாக ஹாரி ப்ரூக் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஹாரி ப்ரூக்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பேர்ஸ்டோ தனது 29ஆவது வயதில் சதம் அடித்தார். ஆனால், ப்ரூக்ஸ் தனது 24ஆவது வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஹாரி ப்ரூக்
அதுமட்டுமின்றி ஒரு வெளிநாட்டு வீரராக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அதுவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த சீசனில் முதல் சதம் அடித்துக் கொடுத்துள்ளார்.
ஹாரி ப்ரூக்
ஐபிஎல் தொடரில் சதமடித்த 5ஆவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதிகவேகமாக சதமடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஹாரி ப்ரூக்
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 228 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ரன்கள் சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.