IPL 2023: வீணாய் போனது நிதிஷ் ராணா, ரிங்குவின் அதிரடி ருத்ரதாண்டவம்; கொல்கத்தாவில் சிக்ஸர் மழை!

First Published | Apr 14, 2023, 11:54 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போராட்டி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கொல்கத்தான் ஹோம் மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 19 ஆவது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பவுலிங் தேர்வு செய்தார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அதன்படி ஹேரி ப்ரூக் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆனால், மாயங்க் அகர்வால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 9 ரன்களில் ரஸல் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ராகுல் த்ரிபதியும் 9 ரன்களில் வெளியேறினார். இப்படி ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய ரஸல் 2 ஓவர்கள் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். ஆனால், பெரியாக ஒன்றும் பாதிப்பு இல்லை.

Tap to resize

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அதன் பிறகு கேப்டன் எய்டன் மார்க்ரம் களத்திற்கு வந்தார். அவரும்ம் ப்ரூக்கும் இணைந்து கொல்கத்தா வீரர்களின் பந்து வீச்சை நான்கு பக்கமும் பறக்கவிட்டனர். அதிரடியா ஆடிய மார்க்ரம் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தி பந்தில் கேட்சானார். இவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அபிஷேக் சர்மா களத்திற்கு வந்தார். தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவர், 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்த நிலையில், ரஸல் பந்தில் அவுட்டானார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஆனால், ஒருபுறம் ப்ரூக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் கிரிக்கெட்டில் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். கடந்த 3 போட்டிகளில் மொத்தமாக 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் கேப் பார்த்து பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரன்கள் சேர்த்து வருகிறார். ஓபனிங் இறங்கிய அவர் 55 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகள் உள்பட ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதத்தை அடித்து சாதனை படைத்தார். அவர் தனது முதல் சதம் அடித்ததை அவரது குடும்ப உறுப்பினர்கள் நேரில் கண்டு ரசித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கடைசியாக ஹென்ரிச் க்ளாசென் ஒரு சிக்ஸர் 2 பவுண்டரிகள் அடித்து 16 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 228 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ரன்கள் சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பின்னர் கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே ஷாக் தான். ரஹ்மானுல்லா குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இம்பேக்ட் பிளேயர் வெங்கடேஷ் ஐயரும் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 10 ரன்னில் வெளியேறினார். வழக்கம் போல் சுனில் நரைன் இந்தப் போட்டியிலும் டக் அவுட். இதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அப்போது தான் நிதிஷ் ராணா களமிறங்கினார். அவரும் ஜெகதீசனும் சேர்ந்து ரன் வேட்டை தொடங்கினர். ஆனால், ஜெகதிசன் 36 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரமான ரிங்கு சிங் களமிறங்கினார். ஒருபுறம் கேப்டன் நிதிஷ் ராணா தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். தொடர்ந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விரட்டினார். 25 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும், 41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பவுலிங்கின் போது காயம் காரணமாக வெளியேறிய ஆண்ட்ரே ரஸல் களமிறங்கினார். ஆனால், அவர் வந்த வேகத்தில் 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஷர்துல் தாக்கூர் வந்தார். கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ஷர்துல் தாக்கூர் 2 பவுண்டரி எடுத்து, 12 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதன் காரணமாக கொல்கத்தா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்த தோல்வியின் மூலமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 போட்டிகளில் தோற்றுள்ளது. 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் மொத்தமாக 22 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதோடு 39 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!