எம் எஸ் தோனி - சுந்தர் சி தாயார் தெய்வானை அம்மாள்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், கடந்த 12 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி வரை போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
எம் எஸ் தோனி - குஷ்பு மாமியார்
இதைத் தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி மறுபடியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
எம் எஸ் தோனி - சுந்தர் சி தாயார் தெய்வானை அம்மாள்
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி, நடிகை குஷ்புவின் மாமியாரும், நடிகரும் இயக்குநருமான சுந்தர் சியின் தாயாருமான தெய்வானை அம்மாளை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தெய்வானை அம்மாள் தோனிக்கு கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எம் எஸ் தோனி - குஷ்பு மாமியார்
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஹீரோக்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கிறாகள். அதைதான் தோனி நிரூபித்துள்ளார். எங்கள் சிஎஸ்கே தல’க்காக நாங்கள் வாழ்த்துகிறோம். அண்மையில் தான் தோனியை எனது மாமியார் சந்தித்தார்.
எம் எஸ் தோனி - சுந்தர் சி தாயார் தெய்வானை அம்மாள்
88 வயதான எனது மாமியார், இந்த வயதிலும் கூட தோனியை வணங்குகிறார். நீங்கள் எனது மாமியாரின் வாழ்க்கையில் மேலும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் சேர்த்திருக்கிறீகள். அதற்காக உங்களுக்கு நன்றி. சிஎஸ்கே அணிக்கு ஒரு விசில் போடு என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி குஷ்புவும், தோனியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
எம் எஸ் தோனி - குஷ்பு மாமியார்
இதற்கு முன்னதாக அடினோவைரஸ் என்னும் தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை தேறியதை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து 2 நாட்களுக்குள்ளாக தோனியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.