ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சல் புதிய திருமண தேதி உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து ஸ்மிருதி சகோதரர் ஷ்ரவன் மந்தனா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த மாத இறுதியில் நடைபெற இருந்த திருமணம் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. தாலி கட்டும் முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் சீனிவாஸ் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சீனிவாஸின் உடல் நிலை தேறியது.
24
டிசம்பர் 7 ஆம் தேதி திருமணமா?
தந்தையின் உடல்நிலை குணமாகும் வரை திருமணம் வேண்டாம் என ஸ்மிருதி மந்தனா முடிவெடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே டிசம்பர் 7 ஆம் தேதி ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சலின் திருமணம் மீண்டும் திட்டமிடப்பட்டதாக வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஆனால் இதை நிராகரித்துள்ள ஸ்மிருதி மந்தனாவின் சகோதரர் ஷ்ரவன் மந்தனா, திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
34
ஸ்மிருதி சகோதரர் விளக்கம்
''இந்த வதந்திகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தற்போது வரை திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை'' என்று ஷ்ரவன் மந்தனா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் பலாஷ் முச்சால் பல்வேறு பெண்களுடன் நடத்திய அரட்டைகளின் ஸ்கிரீன் ஷாட்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாகத்தான் திருமணம் நின்றதாகவும் வதந்திகள் பரவின.
திருமணம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பலாஷ் விமான நிலையத்தில் பொது வெளியில் காணப்பட்டனர். ஆனால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது குறித்தும் திருமண தேதி குறித்தும் பலாஷ் எதுவும் வெளிப்படையாக பேசவில்லை. ஸ்மிருதி மந்தனாவுக்கு முன்பே பலாஷ் முச்சல் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்ததாக அவரது தாயார் அமிதா முச்சால் தெரிவித்து இருந்தார்.