SA vs IND
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 26ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.
South Africa Test Series
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டீன் எல்கர் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒன்றரை நாட்களாக களத்தில் நின்று 185 ரன்கள் குவித்து 15 ரன்களில் இரட்டை சதத்தை கோட்டைவிட்டார்.
Centurion Test Live
இவரைத் தொடர்ந்து மார்கோ ஜான்சென் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் குவித்தது.
South Africa vs India Test
இதையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், விராட் கோலி மட்டுமே கடைசி வரை நின்று 76 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை.
SA vs IND Test
சுப்மன் கில் 26 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பின்வரிசை வீரர்களான கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்ந்து மொத்தமாக 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
Centurion Test Cricket
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கேஎல் ராகுல், 2ஆவது இன்னிங்ஸில் 24 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இறுதியாக இந்திய அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸில் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
India vs South Africa Test
இந்த தோல்வியின் மூலமாக 2023 ஆம் ஆண்டை தோல்வியோடு முடிந்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், இந்த முறையும் அந்த வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், அதனை இழக்காமல் இருப்பதற்கு 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பான முறையில் வெற்றி பெற வேண்டும். அப்படி இல்லையென்றால், இந்த முறையும் தென் ஆப்பிரிக்கா தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
South Africa vs India Test
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா – ஜோகன்னஸ்பர்க் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா – தென் ஆப்பிரிக்கா – கேப் டவுன் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
SA vs IND Centurion Test
இந்தியா – இங்கிலாந்து – பிர்மிங்காம் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா – ஆஸ்திரேலியா – ஓவல் – 2023 – 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
இந்தியா – தென் ஆப்பிரிக்கா – செஞ்சூரியன் – 2023 – 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி