South Africa vs India
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் செய்தது.
SA vs IND 1st Test
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுலின் பொறுப்பான சதத்தால் 245 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் தென் ஆப்பிரிக்கா வீரர் கஜிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
Kagiso Rabada
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா டீன் எல்கரின் அபாராமான பேட்டிங்கால் 408 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய விளையாடிய டீன் எல்கர் 287 பந்துகளில் 28 பவுண்டரி உள்பட 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து டேவிட் பெடிங்காம் 56 ரன்களும், மார்கோ ஜான்சன் 84 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் குவித்தது.
Virat Kohli
இதன் மூலமாக 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தான் கோட்டைவிட்டு விட்டோம். 2ஆவது இன்னிங்ஸிலாவது சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்ப்போம் என்று எந்த வீரரும் நினைக்கவில்லை. வந்த ஒவ்வொரு வீரரும் ஒற்றைப்படை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
Dean Elgar
கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இணைந்து 39 ரன்கள் சேர்த்தனர். கில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
South Africa won 32 Runs and Innings in 1st Test
இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 6, கேஎல் ராகுல் 4, ரவிச்சந்திரன் அஸ்வின் 0, ஷர்துல் தாக்கூர் 2, ஜஸ்ப்ரித் பும்ரா 0, முகமது சிராஜ் 4 என்று வரிசையாக நடையை கட்டினர். கடைசி வரை நிலையாக நின்ற விராட் கோலி அரைசதம் கடந்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.
KL Rahul
தென் ஆப்பிரிக்கா அணியைப் பொறுத்த வரையில் நந்த்ரே பர்கர் 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும், கஜிஸோ ரபாடா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்கா அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 2 இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
Shreyas Iyer
இந்திய அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று எந்த பிளேயரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரன்களை வாரி கொடுத்தது தான் மிச்சம். எனினும், 2023 ஆம் ஆண்டை இந்திய அணி தோல்வியோடு முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli
இதையடுத்து 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுனில் நடக்க இருக்கிறது.