Shreyanka Patil: மகளிர் டி20 உலகக்கோப்பை.. மேட்ச் வின்னர் காயத்தால் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு!

Published : Jun 19, 2026, 11:56 AM IST

Shreyanka Patil: மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய வீராங்கனை மேட்ச் வின்னர் ஸ்ரேயங்கா பாட்டீல் காயம் காரணமாக விலகியுள்ளார். இது நமது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
13
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடர் கோலாகலமாக நடந்து வரும் நிலையில், இந்தியா இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று (ஜூன் 14) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து மெகா வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. பின்பு 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி நமது வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17 ஓவர்களில் 106 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது.

இந்திய அணிக்கு தொடர் வெற்றி

இதேபோல் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், இந்திய அணி நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஸ்மிருதி (74), ஷஃபாலி (55) ஆகியோரின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. 

பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 114 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது. இதற்கிடையே இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின்போது RCB வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

23
ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு காயம்

லீட்ஸ் மைதானத்தில், பந்தை ஃபீல்டிங் செய்ய முயன்றபோது ஸ்ரேயங்காவின் கணுக்கால் திரும்பியது. வலியால் துடித்த அவர், மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். அதாவது பவுண்டரி லைனை நோக்கிச் சென்ற பந்தைத் தடுக்க, ஸ்ரேயங்கா பாட்டீல் வேகமாக ஓடிச்சென்று டைவ் அடித்தார். பந்தை வெற்றிகரமாக தடுத்துவிட்டாலும், டைவ் அடித்த வேகத்தில் ஸ்ரேயங்காவின் வலது கணுக்கால் மோசமாகத் திரும்பி தரையில் சிக்கிக்கொண்டது. வலி அதிகமானதால் ஸ்ட்ரெச்சரில்தான் ஸ்ரேயங்காவை மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்றனர்.

33
T20 உலகக்கோப்பையில் இருந்து ஸ்ரேயங்கா பாட்டீல் விலகல்

இந்த நிலையில், காயத்தின் தீவிரத்தன்மை அதிகமாக இருப்பதால் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து ஸ்ரேயங்கா பாட்டீல் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரேயங்காவுக்குப் பதிலாக 24 வயதான லெக்-ஸ்பின்னர் பிரேமா ராவத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசி தொழில்நுட்பக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்ரேயங்கா பாட்டீல் காயத்தால் அவதிப்படுவது இது முதல் முறையல்ல. 2024-ல் கைவிரல் முறிவு, பின்னர் ஷின் ஸ்பிளின்ட்ஸ் என தொடர் காயங்களால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories