அக்ஸர் படேல் கண்டிப்பாக அந்த சாதனையை படைப்பார்..! அடித்துக்கூறும் அக்தர்

First Published Mar 7, 2021, 3:52 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை போல இன்னும் ஒருசில சிறந்த தொடர்கள் அக்ஸர் படேலுக்கு அமைந்தால், அதிவேக 100 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனையை படைப்பார் என்று ஷோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என வென்றதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் முன்னேறியது. இந்த தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற, இந்த தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அக்ஸர் படேல் முக்கிய காரணம்.
undefined
ஜடேஜா இல்லாததால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல், இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தம் 6 இன்னிங்ஸ்களில் 4 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
undefined
முதல் டெஸ்ட்டில் ஆடாத அக்ஸர் படேல், 2வது டெஸ்ட்டில் அறிமுகமானார். அறிமுக டெஸ்ட்டிலேயே 7 விக்கெட்டை வீழ்த்திய அக்ஸர் படேல், அடுத்த டெஸ்ட்டில் 11 விக்கெட்டுகளையும், கடைசி டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அதிக விக்கெட்டுகளை(27) வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்தார் அக்ஸர் படேல்.
undefined
இந்நிலையில், அக்ஸர் படேல் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், அக்ஸர் படேல் ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் விக்கெட்டுகளை வாரி குவிக்கவில்லை. உண்மையாகவே அவர் புத்திக்கூர்மையான பவுலர். அவரது கட்டுப்பாட்டில் ஆட்டம் இருந்தவரையில், இங்கிலாந்து வீரர்களை சிறப்பாக ஆட அனுமதிக்கவேயில்லை அக்ஸர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரை போல இன்னும் ஒருசில தொடர்கள் அமைந்தாலே, அதிவேக 100 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனையை படைத்துவிடுவார் அக்ஸர் படேல் என்று அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
undefined
click me!