ஆண்டர்சனை ஸ்பின்னரை போல் பாவித்து அடித்து நொறுக்கிய ரிஷப் பண்ட்..! லெஜண்ட் கவாஸ்கர் வியப்பு

First Published Mar 6, 2021, 9:45 PM IST

சர்வதேச அளவில் மிகச்சிறந்த மற்றும் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சனின் பவுலிங்கை ஸ்பின்னை எதிர்கொள்வது போல் எதிர்கொண்டு ரிஷப் பண்ட் ஆடியதாக வியந்து புகழ்ந்துள்ளார் லெஜண்ட் கவாஸ்கர்.
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என வென்றது. கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டின் அதிரடியான சதத்தால்தான் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடித்து இங்கிலாந்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை வென்றதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் முன்னேறியது.
undefined
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், களத்திற்கு வந்தார். ரிஷப் பண்ட் வந்த சிறிது நேரத்திலேயே ரோஹித்தும்(49), அஷ்வினும் ஆட்டமிழக்க, 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.
undefined
அப்படியான இக்கட்டான சூழலிலிருந்து, துணிச்சலுடன் தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடி சதமடித்து இந்திய அணியை காப்பாற்றினார் ரிஷப் பண்ட். முதல் அரைசதத்தை 82 பந்தில் அடித்த ரிஷப் பண்ட், அடுத்த அரைசதத்தை வெறும் 33 பந்தில் அடித்தார். 118 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 101 ரன்களை குவித்து, ஆட்டத்தின் தலையெழுத்தையே மாற்றியது ரிஷப் பண்ட் தான்.
undefined
இந்திய நட்சத்திர வீரர்களான கோலி, புஜாரா, ரஹானே ஆகிய சீனியர் வீரர்களே தடுமாறி விரைவில் விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், இளம் வீரரான ரிஷப் பண்ட், சீனியர் பவுலரான ஆண்டர்சன், ஸ்பின்னர்களான ஜாக் லீச் மற்றும் பெஸ் என அனைவரின் பவுலிங்கையும் அடித்து ஆடினார். குறிப்பாக உலகின் மிகச்சிறந்த மற்றும் சர்வதேச அளவில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சமகாலத்தின் சீனியர் பவுலரான ஆண்டர்சனின் பந்தில் ரிஷப் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடியதை கண்டு வியந்த கவாஸ்கர், ரிஷப்பை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
undefined
ரிஷப் குறித்து பேசிய கவாஸ்கர், 2வது புதிய பந்தில் ஆண்டர்சன் வீசும்போது, ஆண்டர்சன் பவுலிங்கை ஸ்பின்னர் போல பாவித்து ரிவர்ஸ் ஆடினார் ரிஷப். அவர் ஆடிய விதத்தையும் சதத்தை தவறவிடாமல் அடித்ததையும் பார்க்க நன்றாக இருந்தது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!