சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அக்ஸர் படேல்..! அறிமுக தொடரிலேயே தரமான சம்பவம்

First Published Mar 6, 2021, 4:47 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அக்ஸர் படேல், அறிமுக தொடரிலேயே 27 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-1 என வென்றதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது. இன்று முடிந்த கடைசி டெஸ்ட்டின் ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட்டும், தொடர்நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வினும் தேர்வு செய்யப்பட்டனர்.
undefined
இந்த தொடரில் இந்திய அணி சார்பில் சீனியர் வீரரான அஷ்வின் நிறைய விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக திகழ்ந்தார். தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஆனால் இந்த தொடரை இந்திய அணி வெல்ல முக்கியமான மற்றொரு காரணம் அக்ஸர் படேல். இந்த தொடரில் தான் அக்ஸர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். சென்னையில் நடந்த முதல் போட்டியில் அக்ஸர் படேல் ஆடவில்லை. ஷபாஸ் நதீம் தான் ஆடினார். 2வது போட்டியில் தான் அக்ஸர் படேல் அறிமுகமானார்.
undefined
அறிமுக போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய அக்ஸர் படேல், அகமதாபாத்தில் நடந்த பகலிரவு(3வது) டெஸ்ட்டில் 2 இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது டெஸ்ட்டில் மொத்தமாக 7, 3வது டெஸ்ட்டில் 11 விக்கெட்டுகள் வீழ்த்திய அக்ஸர் படேல், கடைசி டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகள் என 3 டெஸ்ட்டில் மொத்தமாக 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 டெஸ்ட்டிலுமே குறைந்தது ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார்.
undefined
இந்த தொடரில்(அதுவும் 3 போட்டிகளில்) 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்மூலம், அறிமுக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார் அக்ஸர் படேல். இதற்கு முன்பாக 2008ல் இந்தியாவுக்கு எதிராக இலங்கை ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் அறிமுக டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அக்ஸர் படேல் முறியடித்துள்ளார்.
undefined
click me!