சச்சின் டெண்டுல்கர் மற்றும் அஞ்சலி டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு இடங்களையும் பார்த்து ரசித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தனது பயணத்தின் ஒரு காட்சியை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இனிமையான அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
24
காதலை வெளிப்படுத்திய சாரா டெண்டுல்கர்
இந்த நகரத்தின் மீது தனக்கு காதல் ஏற்படக் காரணம் என்ன என்பதை சாரா மேலும் வெளிப்படுத்தினார். "ஸ்டோரி பிரிட்ஜில் சூரிய அஸ்தமனக் காட்சிகள் முதல் ஈட் ஸ்ட்ரீட் நார்த்ஷோரில் உணவுப் பிரியர்களின் சொர்க்கம் வரை, ஸ்கை டெக்கில் கூரை சூரிய அஸ்தமனக் காட்சிகள் முதல் டங்கலூமா தீவு ரிசார்ட்டில் சாகசங்கள் வரை!" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு தொகுப்பாளர் கிரேஸ் ஹேடனுடன் இரவு உணவை அனுபவிக்கும் புகைப்படங்களை சாரா பகிர்ந்து கொண்டார். இருவரும் ஒன்றாக ஒரு சிறந்த நேரத்தைக் கழித்ததாகத் தெரிகிறது. இருவரிடையேயான நட்பு நல்ல உணவு மற்றும் உரையாடல் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது. இருவரின் நட்பு சாராவின் ஆஸ்திரேலிய அனுபவத்திற்கு ஒரு தனிப்பட்ட உச்சத்தை கொடுக்கிறது.
34
சாராவின் அழகான புகைப்படங்கள்
சாரா டெண்டுல்கர் பகிர்ந்த இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். ''சாரா மிகவும் க்யூட் ஆக இருக்கிறார். ஆஸ்திரேலியா அவரால் கூடுதல் அழகை பெறுகிறது'' என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ''என்ன! நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க! சுப்மன் கில் வரவில்லையா?'' என்று சில நெட்டிசன்கள் வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லும், சாரா டெண்டுல்கரும் டேட்டிங் செய்வதாகவும், இருவரும் ஒன்றாக சுற்றி வருவதாகவும் நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டனர்.
இது தொடர்பாக பல ஆண்டுகளாக வதந்தி பரவி வரும் நிலையில், அண்மையில் சுப்மன் கில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தான் பல ஆண்டுகளாக தனிமையில் இருப்பதாகவும், இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சுப்மன் கில் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.